Search
  • Follow NativePlanet
Share

ராய் பரேலி – ஓய்வாக பறவைகளையும் பூச்செடிகளையும் ரசிப்போம்!

12

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தன் பெயரிலேயே உள்ள ஒரு மாவட்டத்தின் தலைநகரம் இந்த ராய் பரேலி ஆகும்.  1858ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியின்போது இந்த மாவட்டம் பிரித்து உருவாக்கப்பட்டது. பல சுவாரசிய சுற்றுலா அம்சங்களை கொண்டிருக்கும் இந்த மாவட்டத்தில் சமஸ்பூர் பறவைகள் சரணாலயம் மற்றும் இந்திரா காந்தி மெமோரியல் பாடனிகல் கார்டன் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்திரா காந்தி குடும்பத்தாரின் விசேஷ தேர்தல் களமாக இருந்த வந்தபோதிலும் 2012ம் ஆண்டில் இங்கு வித்தியாசமான முடிவுகளை காங்கிரஸ் சந்திக்க நேர்ந்தது.

ராய் பரேலி மற்றும் சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்

ராய் பரேலி நகரம் மற்றும் மாவட்டத்தில் பார்த்து ரசிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய உள்ளன. மேலே குறிப்பிட்டிருப்பது போல சமஸ்பூர் பறவைகள் சரணாலயம் இங்குள்ள ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும்.

இந்த சரணாலயத்தில் 250 வகையான பறவை வகைகளும் மற்ற காட்டு உயிரினங்களும் வசிக்கின்றன.  இன்னொரு முக்கிய அம்சமான இந்திரா காந்தி மெமோரியல் பாடனிகல் கார்டன் பூங்காவில் அபூர்வ மருத்துவ மூலிகைகள் மற்றும் அலங்கார மலர்த்தாவரங்கள் அதிகம் வளர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த வளாகத்தின் உள்ளே ஒரு தாவரவியல் ஆராய்ச்சி மையமும் உள்ளது.

தல்மாவ் எனும் வரலாற்று நகரமும் ராய் பரேலி மாவட்டத்தில் முக்கியமான ஸ்தலமாக பிரசித்தி பெற்றிருக்கிறது. இங்கு தல் ராஜாவின் கோட்டை, பாரா மத் மற்றும் மஹேஷ் கிரி மத் போன்ற முக்கியமான அம்சங்கள் அமைந்துள்ளன.

சாய் ஆற்றின் மீது கட்டப்பட்டிருக்கும் பேட்டா பாலம் மற்றும் மாவட்டத்திலேயே மிகப்பழமையான நகரமான ஜைஸ் போன்றவையும் ராய் பரேலி சுற்றுலாவின்போது தவறவிடக்கூடாத அம்சங்களாகும்.

எப்படி செல்வது ராய் பரேலி மாவட்டத்துக்கு

விமானம், ரயில், சாலைப்போக்குவரத்து போன்ற மூன்று போக்குவரத்து மார்க்கங்கள் மூலமாகவும் எளிதில் ராய் பரேலிக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளலாம்.

சுற்றுலாவுக்கேற்ற பருவம்

நவம்பர் முதல் மார்ச் வரையுள்ள பருவமே ராய் பரேலிக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது.

ராய் பரேலி சிறப்பு

ராய் பரேலி வானிலை

சிறந்த காலநிலை ராய் பரேலி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ராய் பரேலி

  • சாலை வழியாக
    உத்தரப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களான லக்னோ, அலாஹாபாத், மீரட், ஜான்சி, மற்றும் பரேலி, போன்ற நகரங்களுடன் ராய் பரேலி பேருந்து சேவைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ராய் பரேலி நகரத்தில் ஒரு முக்கியமான ரயில் நிலையம் உள்ளது. லக்னோ, அலாஹாபாத், வாரணாசி, தேராதூன், டெல்லி, பரேலி, பிரதாப்கர், ராம்நகர் மற்றும் கான்பூர் போன்ற நகரங்களிலிருந்து வரும் ரயில்கள் இந்த நிலையம் வழியே நின்று செல்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ராய் பரேலி நகரத்துக்கு விமான நிலையம் இல்லை. அருகில் டெல்லி அல்லது லக்னோ விமான நிலையங்கள் அமைந்துள்ளன. இங்கிருந்து பேருந்து அல்லது ரயில் மூலம் ராய் பரேலி நகரை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 May,Sat
Check Out
10 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun