சமஸ்பூர் பறவைகள் சரணாலயம், ராய் பரேலி

சமஸ்பூர் பறவைகள் சரணாலயம் ராய் பரேலிக்கு அருகில் சலோன் எனும் இடத்தில் அமைந்திருக்கிறது. 1987ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சரணாலயம் 780 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரந்திருக்கிறது.

சந்தடி நிரம்பிய ராய் பரேலி நகரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இயற்கை பேரமைதியுடன் இந்த சரணாலயம் வீற்றிருக்கிறது. 250 வகைகளுக்கும் மேற்பட்ட வசிப்பிட மற்றும் புலம்பெயர் பறவைகள் இங்கு வசிக்கின்றன.

உத்தரப்பிரதேசத்தின் ஒரு முக்கிய பறவைக காப்பகமாக இந்த சரணாலயம் விளங்குகிறது. வல்லூறு, மீன்கொத்ஹ்டி, புள்ளி நாரை, விசிலடிச்சான் ஆகிய பலவகைப்பறவைகள் இங்கு வசிக்கின்றன.

பல்வேறு மீன் இனங்கள் வசிக்கும் ஒரு ஏரியும் இந்த சரணாலயத்தின் உள்ளே அமைந்திருக்கிறது. சுற்றுலாப்பயணிகள் மட்டுமல்லாமல் உள்ளூர் மக்களும் இந்த சரணாலயத்திற்கு பொழுதுபோக்கு பிக்னிக் பயணம் மேற்கொள்வதை விரும்புகின்றனர்.

நவம்பர் முதல் மார்ச் வரையான காலத்தில் இங்கு பல்வேறு பறவையினங்களை பார்த்து ரசிக்கலாம். உயரமான இடங்களிலிருந்து புலம்பெயர் பறவைகள் ஏராளமாக இக்காலத்தில் விஜயம் செய்கின்றன.

Please Wait while comments are loading...