பாராபங்கீ – ரிஷிகள் வசித்த பூமி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபைஸாபாத் மண்டலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஒன்று இந்த பாராபங்கி. இந்த பெயரிலேயே இதன் தலைநகரமும் அழைக்கப்படுகிறது. பூர்வாஞ்சல் பகுதிக்கான நுழைவாயிலாக இந்த பாராபங்கி அமைந்திருக்கிறது. முற்காலத்தில் பல யோகிகளும் ரிஷிகளும் தவம் புரிந்த இடமாக இது அறியப்படுகிறது. கி.பி 1000 த்தில் இந்த பகுதி கண்டறியப்பட்டதாக நம்பப்படுகிறது. பின்னாளில் முஸ்லிம்களின் ஆளுகைக்குள் இருந்தபோது இந்த பிரதேசம் 12பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் இதற்கு பாரா என்ற அடைமொழி வந்திருக்கிறது. பன் என்பது வனத்தைக்குறிக்கும் எனவே 12 துண்டங்களை கொண்ட காடு என்றும் வேறொரு பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது.

பாராபங்கியின் சுற்றுலா அம்சங்கள்

பாராபங்கி பகுதியில் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கு ஏராளமான அம்சங்கள் நிறைந்துள்ளன. பாரிஜாத மரம் எனப்படும் அரிய வகை இருபால் தாவரம் இப்பகுதியில் காணப்படுகிறது.

பாராபங்கி கண்டாகர் அல்லது மணிக்கூண்டு இந்த நகரத்தின் நுழைவாயிலாக அமைந்திருக்கிறது. இங்குள்ள மஹாதேவா கோயில் மாவட்டத்திலேயே பழமையான கோயிலாக அமைந்துள்ளது.

பாராபங்கி மாவட்டத்தில் பல வரலாற்றுக்கிராமங்களும் நகரங்களும் நிரம்பியுள்ளன. அரசகுடும்பத்திற்கான ராஜ குருவின் சொந்த ஊரான சத்ரிக், ஹாஜி வாரிஸ் அலி ஷா எனும் தர்க்கா சன்னதி அமைந்துள்ள தீவா, முக்கிய யாத்ரீக படோசராய், குந்தி பிறந்த இடமாக சொல்லப்படும் கிண்டூர் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

பயணத்திற்கு ஏற்ற பருவம்

நவம்பர் முதல் மார்ச் வரையுள்ள பருவம் இப்பகுதிக்கு சுற்றுலா விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இதர மாதங்களில் இங்கு அதிக உஷ்ணம் காணப்படும்.

போக்குவரத்து வசதிகள்

விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கமாக இந்த பாராபங்கி மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்ளலாம்.

Please Wait while comments are loading...