துத்வா - 'ராயல் டைகரின்' அரசாங்கம்!

சுற்றுலாத் தலங்களுக்கு பெயர் பெற்ற உத்திரப்பிரதேசத்தில் பல அருமையான மற்றும் அட்டகாசமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று துத்வா தேசிய பூங்கா ஆகும். துத்வா டைகர் ரீஜன் ரிசர்வ் என்று அழைக்கப்படும் இந்த பூங்கா, உத்திரப்பிரதேசத்தில் உள்ள துணை இமயமலைப் பகுதியான டெராய் பகுதியில் அமைந்திருக்கிறது. துத்வா பூங்கா, இந்திய நேபாள எல்லையான லக்ஷிம்பூர் - கேரி மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளது. பூமியிலுள்ள மிக ஆபத்தான பகுதிகளுள் ஒன்றாக டெராய் பகுதி கருதப்படுகிறது.

துத்வா தேசிய பூங்கா

துத்வா தேசிய பூங்கா 1958-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. காட்டு மான்களின் சரணாலயமாக இந்த பூங்கா நிறுவப்பட்டது. பின் அர்ஜன் சிங் என்பவரின் தீவிர முயற்சியால் இந்த பூங்கா 1977ல் பலரையும் கவரக்கூடிய ஒரு முக்கிய பூங்காவாக மாறியது.

பின் 10 ஆண்டுகள் கழித்து அதாவது 1988ல், கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம் மற்றும் கத்தார்நிகாத் வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றோடு சேர்த்து இந்த பூங்கா புலிகளின் சராணாலயமாக அறிவிக்கப்பட்டது.

இந்த டைகர் சரணாலயப் பகுதி, துத்வா தேசிய பூங்கா மற்றும் கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம் என்று இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகளும் ஏறக்குறைய 15 கிமீ பரப்பளவில் அமைந்திருக்கின்றன இந்திய நோபாள எல்லையில் பாய்ந்து வரும் மோகனா ஆறு இந்த பூங்காவின் வடக்கு எல்லையாகவும், சுஹேலி ஆறு தெற்கு எல்லையாகவும் அமைந்திருக்கிறது.

இந்தப் பகுதி பெரும்பாலும் சமதளமான நிலப்பகுதிகளைக் கொண்டுள்ளது. இடையிடையே ஏரிகள், குளங்கள் மற்றும் பல சிற்றோடைகளும் இந்த பகுதியில் நிரம்பி இருக்கின்றன.

இந்த பகுதியில் இருக்கும் மிகவும் வளமான இந்தோ கங்கேட்டிக் சமதளமான நிலப்பகுதி, ஃப்ளோரா மற்றும் சால் போன்ற காடுகள் இந்த பூங்காவில் உள்ளன.

துத்வா பூங்காவில் இருக்கும் வனவிலங்குகள்

துத்வா பூங்கா, உண்மையாகவே வனவிலங்குகளின் புகலிடமாக விளங்கி வருகிறது. இந்த பூங்காவில் சிறுத்தை பூனை, மீன் பிடிக்கும் பூனை, ரேட்டில், சிவட், நரி, ஹாக் மான் மற்றும் குறைக்கும் மான் போன்ற விலங்குகள் நிரம்பியுள்ளன.

அதோடு ஹிஸ்பிட் முயல்களுக்கும் இந்த பூங்கா சரணாலயமாக விளங்கி வருகிறது. இந்த முயல்கள் 1951-ல் அழிந்து போன விலங்குகளாக இருந்தன. பின் 1984-ல் பலரின் முயற்சியால் இந்த முயல்கள் மீண்டும் இந்த பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டன.

மேலும் இந்த பூங்காவில் இருக்கும் ஆற்றங்கரைகளில், குட்டை மூக்குகள் கொண்ட முதலைகள், மலைப் பாம்புகள் மற்றும் ராட்சத பல்லிகள் போன்றவற்றைப் பார்க்கலாம்.

பறவைகளின் சரணாலயம்!

பறவை விரும்பிகளுக்கு துத்வா பூங்கா ஒரு சொர்க்கமாக விளங்குகிறது. ஏறக்குறைய 400 வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவை இனங்களின் வாழ்வாதாரமாக இந்த பூங்கா அமைந்திருக்கிறது.

இந்த பூங்காவில் உள்ள சிறிய குளங்கள் மற்றும் ஏரிகளில் இருக்கும் தண்ணீர், எல்லா வகையான பறவை இனங்களையும் கவர்ந்திழுக்கின்றன.

இந்த பூங்காவில் இருக்கும் பேங்க் தல் என்ற பகுதியில் ஏராளமான வாத்துகள், நாரைகள், இக்ரெட்டுகள், கார்மொரன்டுகள், ஹெரான் மற்றும் டீல் போன்ற பறவைகளைப் பார்க்கலாம்.

அதுபோல் ஐரோப்பிய பறவைகளான வெள்ளைக் கழுத்து கொண்ட ஸ்டார்க்குகள், பல வண்ண ஸ்டார்க்குகள் மற்றும் திறந்த பில்டு ஸ்டார்க்குகள் போன்ற பறவைகளை இந்த பூங்காவில் கண்டு ரசிக்கலாம்.

மேலும் பலவண்ண அழகுகளில் இருக்கும் பறவைகளான உட்பெக்கர்கள், பார்பெட்டுகள், மினிவெட்டுகள், புல்புல்கள் மற்றும் கிங்க்பிஷர்கள் போன்றவை இந்த பூங்காவை அழகு செய்கின்றன.

Please Wait while comments are loading...