பரேலி – நாக சாதுக்களின் நகரம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் ஒரு முக்கிய நகரம் பரேலி ஆகும்.  வட இந்தியாவின் ஒரு பெரிய வணிக நகரமாக இந்த நகரம் பிரசித்தி பெற்றுள்ளது. இங்குள்ள பல கோயில்கள் மற்றும் ஆன்மீக வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றுக்காக இந்த நகரம் புகழ் பெற்றுள்ளது. ராம்கங்கா ஆற்றை ஒட்டி அமைந்துள்ள இந்த நகரம் பல சுவாரசியமான அருங்காட்சியகங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை கொண்டிருக்கிறது.

மரச்சாமான் தயாரிப்பில் குறிப்பாக பிரம்பு இருக்கைகள் தயாரிப்பில் இந்த பரேலி நகரம் முன்னணியில் உள்ளது. பன்ஸ் – பரேலி என்ற பெயரிலும் இந்த நகரம் அழைக்கப்படுகிறது.

பன்ஸ் எனும் சொல் பிரம்பு எனும் பொருளைத்தருவதாக இருந்தாலும் இந்தப்பெயர் பன்ஸ்தேவ் மற்றும் பரால்தேவ் என்ற இரண்டு இளவரசர்களை கௌரவிக்கும்விதமாக வைக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் இந்த நகரத்தை நிர்மாணித்த ஜகத்சிங் கதேரியா எனும் மன்னரின் வாரிசுகள் ஆவர்.

பரேலி மற்றும் அதை சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்

முன்பே கூறியதுபோல இங்குள்ள பல கோயில்களுக்காக புகழ்பெற்றுள்ள பரேலி நகரத்தில் நான்கு முக்கியமான சிவன் கோயில்கள் அமைந்திருக்கின்றன. தோப்பேஸ்வர்நாத், மதிநாத், திரிவதிநாத் மற்றும் அலக்நாத் என்பவையே அவை. 

இந்த நான்கும் நகரத்தின் நான்கு மூலைகளிலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள லட்சுமி நாராயணன் கோயிலும் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். ஃபன் சிட்டி எனும் தனியார் உல்லாசப்பூங்கா ஒன்று இந்நகரத்தில் விஜயம் செய்ய வேண்டிய சுற்றுலா அம்சமாக அமைந்திருக்கிறது.

குடும்பத்துடன் பிக்னிக் விஜயம் செய்து நீர் விளையாட்டுகளில் ஈடுபட இது மிகவும் ஏற்றதாகும். தர்க்கா இ அலா ஹஸாரத், பீபி ஜி கி மஸ்ஜித் மற்றும் ஷீ சாய் மந்திர் போன்றவை இங்குள்ள இதர ஆன்மீக வழிபாட்டுத்தலங்களாகும்.

இந்நகரத்தின் வரலாற்றுப்பின்ணி குறித்து தெரிந்து கொள்ள விரும்பும் பயணிகள் பஞ்சலா மியூசியம் மற்றும் ஆர்மி சர்வீஸ் கார்ப்ஸ் மியூசியம் போன்ற அருங்காட்சியகங்களுக்கு விஜயம் செய்யலாம்.  

பரேலி நகரத்திற்கு விஜயம் செய்ய ஏற்ற காலம்

பரேலி நகரத்திற்கு குளிர்காலத்தில் சுற்றுலா விஜயம் செய்வது சிறந்தது.

எப்படி செல்வது?

ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகளின் மூலம் மிக சுலபமாக பரேலி நகரத்தை அடையலாம். அருகிலுள்ள விமான நிலையம் டெல்லியில் உள்ளது.

Please Wait while comments are loading...