Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பரேலி » ஈர்க்கும் இடங்கள் » தூபேஷ்வர்நாத் கோயில்

தூபேஷ்வர்நாத் கோயில், பரேலி

14

தூபேஷ்வர்நாத் கோயில் அமைந்திருக்கும் இடம் வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறியப்படுகிறது. இது த்ரௌபதி மற்றும் திருஷ்டத்யும்னன் ஆகிய மஹாபாரத பாத்திரங்கள் சிவபெருமானுடைய ஆசியோடு அவதரித்த ஸ்தலமாக சொல்லப்படுகிறது.

புராணங்களின்படி இந்த கோயில் ஸ்தலத்தில் அர்தி ரிஷியின் சீடராகிய தூமர் ரிஷி வெகு காலம் தவம் புரிந்து வந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் சிவபெருமான் சிவலிங்கரூபமாக அவர் முன் தோன்றி அவரது தவத்தை அங்கீகரித்துள்ளார்.

சிவன் கோயிலான தூபேஷ்வர்நாத் கோயில் பரேலி நகரத்தின் கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்திருக்கிறது. தூபேஷ்வர்நாத் சிலையை தரிசிப்பதற்கு பக்தர்கள் ஒரு புராதன சுரங்கப்பாதையை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

நீளம் குறைவான சுரங்கப்பாதையாக இருந்தாலும் இது முழங்கால அளவிற்கு நீர் நிரம்பி காணப்படுகிறது. இதில் நடந்துதான் தரிசனத்திற்கு பக்தர்கள் செல்ல முடியும். இந்த கோயில் வளாகத்தில் உள்ள ஒரு தீர்த்தக்குளத்தின் நீருக்கு தோல் வியாதிகளை தீர்க்கும் சக்தி உள்ளதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.

பரேலி நகரத்தின் மிகப்பழமையான கோயில்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தூபேஷ்வர்நாத் கோயில் ‘ரக்ஷா கவாச்’ என்று அழைக்கப்படுகிறது. நகரத்தை தீய சக்திகளிலிருந்து காக்கும் சக்தி எனும் பொருளில் இந்த பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed