Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பரேலி » ஈர்க்கும் இடங்கள் » ஃபன் சிட்டி

ஃபன் சிட்டி, பரேலி

14

ஃபன் சிட்டி என்ற பெயரில் எண்ணற்ற பொழுதுபோக்கு பூங்காக்கள் இந்தியா முழுதும் அமைந்திருந்தாலும் அவற்றில் இந்த பரேலி நகரத்தில் உள்ள ஃபன் சிட்டி பொழுதுபோக்கு பூங்கா வட இந்தியாவிலேயே மிகப்பெரிய ஒன்றாகும்.

எல்லா வயதினருக்கும் ஏற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த பூங்காவில் நிறைந்துள்ளன. எனவே பரேலி நகர மக்களுக்கு மட்டுமல்லாது சுற்றுலா விஜயம் செய்யும் பயணிகளுக்கும் ஏற்றதொரு பொழுதுபோக்கு தலமாக இது பிரசித்தி பெற்றுள்ளது.

13 ஏக்கர் நிலப்பரப்பில் 2000ம் ஆண்டில் இந்த பொழுதுபோக்கு பூங்கா உருவாக்கப்பட்டிருக்கிறது. நீர் விளையாட்டுகள், கார் சவாரி மற்றும் ரயில் சவாரி, கடல்கரை அமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான இயந்திரச்சவாரிகள் போன்றவை இந்த பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அக்வா ஷூட், ஹரா கிரி, பம்பிங் கார், ஃப்ளையிங் பஸ், ஃபன் சிட்டி எக்ஸ்பிரஸ், ஃபிரீஸ்பீ, பிரேக் டான்ச், ஃப்ரீ ஃபால், அரௌன்ட் தி வேர்ல்டு, டார்க் ரைட்ஸ், கொரில்லா வீடியோ கேம், கோஸ்ட் டிரெயின் மற்றும் முகம்போ குகை போன்றவை இந்த பூங்காவிலுள்ள முக்கியமானபொழுது போக்கு அம்சங்களாகும்.

இந்த பூங்காவில் பூந்த் எனும் பிரத்யேக நீர் விளையாட்டு பூங்காவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் சாகச இயந்திரச்சவாரிஅகள், ரோலர் கோஸ்டர், டிஸ்கொதே அரங்கு மற்றும் திறந்தவெளி அரங்கு போன்றவை உள்ளன.  

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 May,Sun
Return On
01 Jun,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 May,Sun
Check Out
01 Jun,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 May,Sun
Return On
01 Jun,Mon