Search
  • Follow NativePlanet
Share

கஜியாபாத் - இந்தியாவின் ஷாப்பிங் மையம்!

18

டெல்லியுடன் தனது எல்லையை பகிரர்ந்தபடி இருக்கும் கஜியாபாத், உத்தரபிரதேசத்தின் வாயிலாகத் திகழ்கிறது. தொழில் நகரமான கஜியாபாத்தை  வடிவமைத்து அதற்கு கஜியூதின்நகர் என்று பெயருமிட்டவர் கஜி-உத்-தீன் என்ற முகாலய அமைச்சர் ஆவார். பின்னர் அப்பெயர் கஜியாபாத் என சுருக்கமாக வழங்கப்பட்டது.

ஹிண்டான் நதியின் கிழக்கே 1.5கிமீ தொலைவில் அமைந்துள்ள கஜியாபாத், இடம்பெயர்பொறிகளை தயாரிக்கும் மற்றும் பேணும் கூடங்ளையும், ராணுவ பய்ன்பாடுகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளையும், கண்ணாடி பொருட்கள், ஓவியத் திரைகள், பானைகள், வர்ணங்கள், மெருகெண்ணய் தயாரிக்கும் தொழிற்சாலைகளையும் கொண்டுள்ளது.   

டெல்லிக்கு அருகில் இருப்பதால் பெரிய கடைவீதிகளையும், பேரங்காடிகளையும் கொண்ட ஊராக வேகமாக வளர்ந்து வருகிறது.

ஏற்கனவே இங்கிருக்கும் பேரங்காடிகளுக்கும், கடைவீதிகளுக்கும் டெல்லி மற்றும் அருகில் இருக்கும் ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் சில்லறை விற்பனைப் பொருட்கள் வாங்க வருகிறார்கள். கஜியாபாத் மாவட்டத்தின் ஒருபகுதியாகவே கஜியாபாத் விளங்குகிறது.

கஜியாபாத்தில் இருக்கும் சுற்றுலா தலங்கள்

கடைகளும், பல்திரையரங்குகளையும் தவிர கஜியாபாத்தை சுற்றியுள்ள நகரங்களையும், கிராமங்களையும் கூட சுற்றிப் பார்க்கலாம். உத்தர பிரதேசத்தின் மீரத் மாவட்டத்தில் இருக்கும் அஜ்ராரா கிராமத்தில் இருந்துதான் அஜ்ராரா முறை மேஜை விளையாட்டிற்கு அப்பெயர் வந்தது.

தஸ்னா என்ற கிராமத்தில் புகழ்பெற்ற கோட்டை ஒன்று அமைந்துள்ளது. தெளலானா என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் சதி மலிந்தா தேவி கோவிலுக்கு அருகே ஒவ்வொரு வருடமும் விற்பனைத் திருவிழா நடைபெறுகிறது.

மேலும் முகாலய மன்னர் அக்பரால் உருவாக்கப்பட்ட ஃபரிதாபாத் பெரிய இரும்பு வாயிற்கதவுகளால் பாதுகாக்கப்படும் 'கர்ஹி பல்லோசன்'னுக்கு புகழ்பெற்றது. அதன் அருகிலேயே ஜம்மா மஸ்ஜித்தும் அமைந்துள்ளது.

வருடந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தரும் கர்ஹ்முக்தேஷ்வரர் கோவில் ஹாபூரில் அமைந்துள்ளது. பழங்கால அனுமன் கோவில் அமைந்திருக்கும் லோவி நகரத்தையும் பார்வையிடலாம். பரசுராமரின் பிறப்பிடமாக கருதப்படும் ஜலலாபாத்தையும் பயணிகள் சுற்றிப்பார்க்கலாம்.

அதுமட்டுமல்லாது இந்தியாவின் புகழ்பெற்ற வியாபாரக் குடும்பத்தின் பெயர் சூட்டப்பட்ட மோடிநகரும் இங்குள்ளது. NCRயின் வளரும் நகரமான மோஹன் நகர் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற தேவையான உள்கட்டமைப்பு வசதியோடு சிறந்து விளங்குகிறது.

மூன்று முக்கியமான கல்வி நிலையங்களைக் கொண்ட முரத்நகர் இந்திய ராணுவத்துக்கு தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்கிறது. இறுதியாக தாத்ரி என்ற வளர்ந்துவரும் தொழிற்வளர்ச்சி நகரமும் இங்கு அமைந்துள்ளது.

கஜியாபாத் செல்ல சிறந்த பருவம்

டெல்லிக்கு அருகாமையில் இருப்பதால் கிட்டத்தட்ட டெல்லியைப் பொன்ற வானிலையே இங்கும் நிலவுகிறது. ராஜஸ்தானிலிருந்து வரும் மணல் புயலையும், இமாலய பனிப்பொழிவையும், அருகில் உள்ள கார்வால் மலையையும் கஜியாபாத்தின் வானிலை சார்ந்திருக்கிறது.

நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களே கஜியாபாத் செல்ல சிறந்த பருவமாக கருதப்படுகிறது.

கஜியாபாத்துக்கு எப்படி பயணிப்பது

கஜியாபாத் செல்ல நிறைய பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.

கஜியாபாத் சிறப்பு

கஜியாபாத் வானிலை

சிறந்த காலநிலை கஜியாபாத்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கஜியாபாத்

  • சாலை வழியாக
    டெல்லி மற்றும் பல முக்கியமான நகரங்களுடன் கஜியாபாத் நிறைய சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சி பேருந்துகள். மாநில பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் பிற மாநில பேருந்துகள் என பல வகையான பேருந்துகளின் மூலம் இலக்கை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    வேகமான ரயில்களான EMU ஆகியவை மத்தியப் பகுதியில் இருக்கும் கஜியபாத் ரயில் நிலையத்தை பிற ஊர்களுடன் இணைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    45கிமீ தொலைவில் இருக்கும் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையமே அருகாமையில் இருக்கும் விமான நிலையமாகும். இங்கிருந்து மெட்ரோ ரயிலிலோ தனியார் கார் மூலமோ இலக்கை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Aug,Thu
Check Out
21 Aug,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri