Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கஜியாபாத் » வானிலை

கஜியாபாத் வானிலை

கஜியாபாத் செல்ல சிறந்த பருவமாக மிதமான வானிலை நிலவும் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தை சொல்கிறார்கள். மற்ற மாதங்களில் பகல் நேரங்கள் மிகவும் வெப்பமாக இருப்பதாலும், மழைக்காலத்தில் மிக அதிகமான மழை பெய்வதாலும் அக்காலங்களில் பயணத்தை தவிர்ப்பது நன்று.

கோடைகாலம்

மாட்ச் முதல் மே வரை நீளும் கோடைகாலத்தில் வெப்பநிலை 22டிகிரியில் இருந்து 40டிகிரி வரை மாறுபடுகிறது. மே மாதத்தில் அதிகபட்ச வெயில் நிலவுகிறது. பகல் நேரத்தில் வீசும் சூடான காற்று வெப்பத்தை இன்னும் அதிகமாக்குகிறது.

மழைக்காலம்

ஜூலை முதல் செப்டம்பர் வரை நீளும் மழைக்காலத்தில் அதிகமான மழை பெய்கிறது. வானம் மேகமூட்டத்துடனும், வானிலை ஈரப்பதத்துடனும் காணப்படுகிறது.

குளிர்காலம்

நவம்பர் தொடங்கி ஃபிப்ரவரி வரை நீளும் குளிர்காலத்தில் குளிர் மிதமான அளவில் இருக்கிறது. 12டிகிரியில் இருந்து 20டிகிரி வரை குளிர் வேறுபடுகிறது.