Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» ஹஸ்தினாபூர்

ஹஸ்தினாபூர் – காவியப்பின்னணியும் ஜைன மஹோன்னதமும்

21

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட்டுக்கு அருகே கங்கை நதிக்கரையில் இந்த ஹஸ்தினாபூர் எனும் புராதன நகரம் வீற்றிருக்கிறது. இந்திய ஐதீக மரபில் ஒரு முக்கிய நகரமாக அறியப்படும் இது மஹாபாரத காவியத்தில் பாண்டவ – கௌரவ வம்சத்தின் தலைநகராக திகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. மஹாபாரப்போரில் கௌரவர்களை வென்ற பாண்டவர்கள் கலியுகம் துவங்கும் வரை 36 ஆண்டுகளுக்கு ஹஸ்தினாபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டதாக புராணிகம் கூறுகிறது.

பல்வேறு ஜோதிடக்கணிப்புகள், புவியியல் சான்றுகள், தொல்பொருட்கள், கல்வெட்டு மற்றும் சுவடிகள் மூலம் திரட்டப்பட்ட தகவல்கள் மஹாபாரத சம்பவங்கள் கற்பனையாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிவிக்கின்றன.

இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை இந்த பகுதியில் பல்வேறு அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டதில் பல புராதன கோயில்களும் பழமையான சின்னங்களும் வெளிப்பட்டிருக்கிறன.

தற்போது ஹஸ்தினாபூர் ஜெயின் வம்சத்தாரின் புனிதத்தலமாக திகழ்கிறது. 24 தீர்த்தங்கரர்களில் 16, 17 மற்றும் 18 வது தீர்த்தங்கரர்கள் இந்த ஸ்தலத்தில் அவதரித்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் ஏராளமான ஜெயின் யாத்ரீகர்களை இந்நகரம் ஈர்த்துவருகிறது.

ஹஸ்தினாபுரம் மற்றும் அருகிலுள்ள முக்கிய சுற்றுலா அம்சங்கள்

முன்பே சொன்னபடி இந்த ஹஸ்தினாபூர் ஹிந்துக்களுக்கும் ஜெயின் இனத்தார்க்கும் ஒரு முக்கியமான யாத்ரீக ஸ்தலமாக விளங்கிவருகிறது. பழைய பாண்டேஷ்வரர் கோயில், கரண் கோயில் மற்றும் லோட்டஸ் கோயில் போன்றவை இங்கு பிரசித்தமான அம்சங்களாகும்.

திகம்பர் ஜெயின் படா மந்திர், ஜெயின் ஜம்பூத்வீப் மந்திர் மற்றும் ஷ்வேதம்பர் ஜெயின் போன்றவை முக்கியமான ஜைன ஆன்மீகத்தலங்களாக அமைந்திருக்கின்றன. இவை தவிர கைலாஷ் பர்வத், அஷ்டபாத் மற்றும் ஹஸ்தினாபூர் சரணாலயம் போன்றவையும் முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.

பயண வசதிகள்

விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் ஆகிய மூவழிகளின் மூலமாகவும் எளிதில் சென்றடையும்படி போக்குவரத்து வசதிகளை ஹஸ்தினாபூர் கொண்டிருக்கிறது.

பயணத்துக்கு உகந்த பருவம்

அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரையிலான காலம் இந்நகரத்திற்கு சுற்றுலா விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இவை தவிர்த்த மற்ற மாதங்களில் இந்நகரம் அதிக உஷ்ணம் மற்றும் வறட்சியுடன் காணப்படுகின்றன.

முக்கியமான ஹிந்து யாத்ரீக தலமாக இருப்பதால் இந்நகரத்திற்கு அதிக எண்ணிக்கையில் ஆன்மீக யாத்ரீகர்கள் வருடமுழுதும் வருகை தருகின்றனர்.

ஹஸ்தினாபூர் சிறப்பு

ஹஸ்தினாபூர் வானிலை

சிறந்த காலநிலை ஹஸ்தினாபூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஹஸ்தினாபூர்

  • சாலை வழியாக
    அருகிலுள்ள டெல்லி, மீரட் மற்றும் இதர முக்கிய நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்து சேவைகள் ஹஸ்தினாபூருக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஹஸ்தினாபூருக்கு அருகிலுள்ள ரயில் நிலையம் மீரட் நகரத்தில் உள்ளது. இங்கிருந்து டாக்சிகள் மூலமாக ஹஸ்தினாபூருக்கு வரலாம். மேலும் காலை 7.30 மணியிலிருந்து மாலை 8 மணி வரையில் பேருந்து சேவைகளும் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ஹஸ்தினாபூருக்கு அருகில் உள்ள விமான நிலையம் டெல்லி விமான நிலையம் ஆகும். இங்கிருந்து டாக்சிகள் மூலமாக ஹஸ்தினாபூருக்கு வரலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 May,Sun
Check Out
11 May,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon