Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹஸ்தினாபூர் » ஈர்க்கும் இடங்கள் » ஜம்பூத்வீப்

ஜம்பூத்வீப், ஹஸ்தினாபூர்

21

ஜம்பூத்வீப் எனும் இந்த தீவுக்கோயில் ஹஸ்தினாபூர் நகரத்தின் விசேஷமான ஆன்மீகத்தலங்களில் ஒன்றாகும். ஜைன சாத்வி பரம் பூஜ்ய ஷிரோன்மணி ஸ்ரீ கியான்மதி மாதாஜி அவர்கள் 1965ம் ஆண்டு விந்தியமலையில் பஹவான் பஹுபாலி சிலைக்கு கீழே தியானத்தில் ஈடுபட்டிருந்தபோது அவரது ஞானப்பார்வையில் 13 தீவுகளை உள்ளடக்கிய தேராத்வீப் எனப்படும் மத்தியலோகம் தோன்றியதாக சொல்லப்படுகிறது.

இந்த சாத்வி கண்டதைப்போன்ற ஒரு மத்தியலோகம் பற்றிய விவரணம் 2000 ஆண்டு பழமையான ஜைன ஆகமங்களில் இருப்பதும் உறுதிசெய்யப்பட்டது.

முதலாம் தீர்த்தங்கரான ரிஷபதேவர் என்பவரும் இது போன்ற மத்யலோக காட்சியை சுமேரு மலையில் தனது தவக்கனவில் கண்டுள்ளார். ஜைன மார்க்கத்தினர் நம்பும் புவியியல் அமைப்பின் மாதிரி வடிவமாக இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

இதன் மையத்தில் 101 அடி உயரமுள்ள சுமேரு பர்வத் அமைப்பும் அதை சுற்றி 250 அடி விட்டமுள்ள ஜம்புத்வீப் அமைப்பு நான்கு திசைகளிலுமான தனி மண்டலங்களுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

சுமேரு பர்வத் 101 அடி உயரம் கொண்டதாக காணப்படுகிறது. இது சைதாலயாக்கள், ஆறுகள், மலைகள் மற்றும் லவ்ண சமுத்திரம் ஆகியவற்றை கொண்டிருக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed