Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹஸ்தினாபூர் » ஈர்க்கும் இடங்கள் » லோட்டஸ் கோயில்

லோட்டஸ் கோயில், ஹஸ்தினாபூர்

21

கமலா மந்திர் என்ற ஹிந்திப்பெயரிலும் அறியப்படும் இந்த தாமரைக்கோயில் பிரசித்தமான ஜம்பூத்வீப் கோயிலின் முற்றத்தில் வீற்றிருக்கிறது. இந்த அழகிய சிறு கோயில் 1975ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. இதில் மஹாவீரர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோயில் அதிக அளவில் பக்தர்கள், யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து வருகிறது. தியா எனப்படும் மண்விளக்குகளை ஏற்றியும் சத்ரா எனப்படும் தங்கக்குடைகளை நேர்த்திக்காணிக்கையாக அளித்தும் இங்கு விருப்பங்கள் நிறைவேற வழிபடுகின்றனர்.

101 அடி உயரம் கொண்ட சுமேரு பர்வத அமைப்பிற்கு அருகில் இந்த கோயில் உள்ளது. இந்த சுமேரு பர்வதத்தின் உச்சிக்கு 136 உள்படிகளில் ஏறி சென்றடையலாம். உச்சிப்பகுதி பாண்டுஷிகா என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சுமேரு பர்வதத்தின் உச்சியிலிருந்து சுற்றிலும் ஜம்புத்வீப் பகுதியில் வீற்றிருக்கும் மலைகள், ஆறுகள்,  கோயில்கள், தோட்டங்கள் ஆகியவற்றை பார்த்து ரசிக்கலாம். அதுமட்டுமல்லாது நகரை சூழ்ந்துள்ள வனப்பகுதியை இங்கிருந்து பார்த்து ரசிக்க முடியும்.

ஜைன ஆகமங்களின்படி சுமேரு பர்வதம் எனும் மலையே பூலோகத்தில் உயர்ந்த மலையாக சொல்லப்படுகிறது. எல்லா தீர்த்தங்கரர்களும் இந்த சுமேரு மலையில்தான் தீட்சை அளிக்கப்படுகின்றனர். எனவேதான் இந்த மலை ஒரு முக்கியமான அங்கமாக இந்த கோயில் வளாகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed