நவம்பர் முதல் மார்ச் வரையிலான பருவமே பாராபங்கி நகரத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இதர மாதங்களில் கடும் வெப்பமும் வறட்சியும் நிலவுகிறது.
(மார்ச் முதல் மே வரை) : பாராபங்கி பகுதியில் மார்ச் மாதம் துவங்கும் கோடைக்காலம் மே மாதம் வரையில் நீடிக்கின்றது. இக்காலத்தில் குறைந்தபட்சமாக 35°C முதல் அதிகபட்சமாக 45°C வரை வெப்பநிலை செல்லக்கூடும். பொதுவாக கோடைக்காலத்தில் அதிக உஷ்ணமும் வறட்சியும் காணப்படுகிறது.
(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : பாராபங்கி பகுதியில் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மழைக்காலம் நிலவுகிறது. கடுமையான மழைப்பொழிவு காணப்படும் இக்காலத்தில் சூழல் ஈரமாகவும் ஈரப்பதம் அதிகம் நிரம்பியும் காணப்படும்.
(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பாராபங்கி பகுதியில் குளிர்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் 25°C முதல் மிக குறைந்தபட்சமாக 3°C வரை வெப்பநிலை காணப்படுகிறது.