Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » விந்தியாஞ்சல் » ஈர்க்கும் இடங்கள் » காளிக்கோ கோயில்

காளிக்கோ கோயில், விந்தியாஞ்சல்

10

வட இந்தியாவின் முக்கியமான யாத்ரீக மற்றும் சுற்றுலா ஸ்தலமான காளிக்கோ கோயில், விந்தியவாசினி கோயிலில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில், விந்திய மலைத்தொடர்களில் காணப்படும் ஒரு மலைக்குன்றின் மேல் உள்ள குகை ஒன்றில் அமைந்துள்ளது.

காளி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த பழங்காலக் கோயிலில் அவரது சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது பண்டைகால நீரூற்றுகளுக்கு மத்தியில், அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதனால் தனித்துவமான வசீகரத்தோடு காணப்படுகிறது.

கம்பீரமான மலைகளை பின்னணியில் கொண்ட இதன் ஒப்பற்ற அமைப்பு, வருடம் முழுவதும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை இங்கு வரவழைக்கக்கூடியதாகத் திகழ்கிறது.

இக்கோயில், பக்திர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காகவும், அவர் தம் நோய்களை குணப்படுத்துவற்காகவும், பல்வேறு சடங்குகளை செய்யக்கூடியவர்களான தாந்திரீகர்கள் பலர் வாழும் இடமாகவும் திகழ்கிறது.           

அஷ்டபுஜா மற்றும் விந்தியவாசினி ஆகியோருக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ள மற்றும் இரண்டு முக்கிய கோயில்களும் இக்கோயிலுக்கு அருகில் அமையப்பெற்றுள்ளன.

இம்மூன்று கோயில்களும் சேர்ந்து  திரிலோகம் அல்லது ட்ரோய்க்கா என்றழைக்கப்படும் மூன்று லோகங்களின் குறியீடாகக் காணப்படுகின்றன. இம்மூன்று கோயில்களையும் சுற்றி பிரதட்சணம் வருவதை பக்தர்கள் மத அடிப்படையில் மிகச் சிறந்த புண்ணிய காரியமாகக் கருதுகின்றனர். இந்த மங்களகரமான சடங்கு திரிலோக பரிக்ரமா என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Aug,Thu
Check Out
21 Aug,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri

Near by City