அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலமே விந்தியாஞ்சல் செல்வதற்கு உகந்த காலகட்டம் ஆகும்.
மார்ச் முதல் ஜூன் வரையிலான மாதங்கள் கோடைகால மாதங்களாக விளங்குகின்றன. உச்ச வெப்பநிலை நிலவும் மாதத்தில், மெர்க்குரி சுமார் 45 டிகிரி செல்சியஸ் வரை கூட செல்லும். வெப்பக்காற்று வீசி இக்கோடை நாட்களை மேலும் கடுமையானவையாக மாற்றுகின்றன.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலம், விட்டு விட்டுப் பெய்யக்கூடிய கடும் மழைப்பொழிவைப் பெறுகின்றது. இக்காலத்தின் போது இங்கு வானிலை ஈரப்பதத்துடன் காணப்படும். அதிகபட்ச ஈரநிலை நிலவும் மாதம் ஆகஸ்ட் மாதம் ஆகும்.
டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும் குளிர்காலம், இதமான மற்றும் ரம்மியமான வானிலையுடனும், சுமார் 12 டிகிரி செல்சியஸ் மற்றும் 20 டிகிரி செல்சியஸுக்கு இடைப்பட்ட வெப்பநிலையுடனும் காணப்படும்.