Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வான்கனேர் » வானிலை

வான்கனேர் வானிலை

கோடைகாலம்

மார்ச் முதல் மே மாதம் வரை வான்கனேரில் கோடைக்காலம் நீடிக்கும். இந்நேரத்தில் தட்ப வெப்ப நிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். மே மாதம் தான் வெப்பம் மிகுந்த மாதமாக அறியப்படுகிறது.

மழைக்காலம்

வான்கனேரில் மழைக்காலம் ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும். இந்நேரத்தில் அதிக அளவில் மழை பெய்யக்கூடும். சராசரியாக 221 மி.மீ. அளவில் மழை பெய்யும். இந்நேரத்தில் தட்ப வெப்ப நிலை  24 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

குளிர்காலம்

குளிர் காலம் டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கும். டிசம்பர் மாதத்தில் தான் கடுமையான குளிர் நிலவும். இக்காலத்தில் தட்ப வெப்ப நிலை 10 டிகிரி செல்சியஸ் முதல் 22 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.