பூக்கோட் ஏரி, வயநாடு

பூக்கோட் ஏரி அல்லது பூக்கோடே ஏரி என்று அழைக்கப்படும் இந்த நன்னீர் ஏரி வயநாட் பகுதியில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் காணப்படும் இந்த ஏரி கேரளாவின் இயற்கை எழில் நிறைந்த பிக்னிக் சிற்றுலா ஸ்தலங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது.

இந்த ஏரியின் கரையில் அமர்ந்தபடி சுற்றிலும் சொர்க்கம் போன்று எழும்பியிருக்கும் இயற்கை காட்சிகளை ரசித்து மகிழலாம் அல்லது குடும்பத்துடன் ஏரிப்பகுதியில் படகுச்சவாரியும் மேற்கொள்ளலாம்.

ஏரியிலிருந்து சிறிது தூரத்தில் ஸ்ரீ நாராயண ஆஷ்ரம் அமைந்துள்ளது. ஆன்மீக அதிர்வுகளை மனதில் நிரப்பிக்கொள்ள இந்த ஆசிரமத்திற்கு விஜயம் செய்யலாம். அமானுஷ்ய அமைதியுடன் வீற்றிருக்கும் இந்த ஆசிரமப்பகுதியானது பயணிகளின் கவலைகள் யாவையும் துடைத்தெறிந்து மனதை இறகு போல் லேசானதாக மாற்றும் அற்புத வலிமை கொண்ட ஸ்தலமாகும்.

புராதனமான இந்த ஆசிரமத்தை சுற்றிலுமுள்ள பரவசமூட்டும் இயற்கைக்காட்சிகளும், பூத்துக்குலுங்கும் மரங்களும், தூய நீருடன் மின்னும் ஏரியுமாக காட்சியளிக்கும் பூக்கோட் ஏரிஸ்தலம் காண்பவர் கண்களை கவராமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஏரிப்பகுதியிலிருந்து கொஞ்ச தூரத்தில் அமைந்துள்ள கடைகளில் அன்புக்குரியவர்களுக்காக ஞாபகார்த்தப் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம்.

Please Wait while comments are loading...