Tap to Read ➤

அழகான கேரளத்து உப்பங்கழிகள்!

உப்பங்கழிகள் (backwaters) என்றால் என்ன, அவற்றை ஏன் பார்க்க வேண்டும் என்று யோசிக்கிறீர்களா? உப்பங்கழிகளின் ஹவுஸ்போட்டில் சுற்றுப்பயணம் செய்வது மிகவும் அலாதியாக இருக்கும். கேரளாவில் உள்ள வெவ்வேறு உப்பங்கழிகள் பற்றி தெரிய வேண்டுமா?
Yogalakshmy Ponnan
ஆலப்புழா உப்பங்கழிகள்
உப்பங்கழிகள் என்ற உடனே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது ஆலப்புழா மட்டுமே. அமைதியான சூரிய அஸ்தமனம், கரையோரத்தில் தென்னை மரங்கள், மேலே பறக்கும் அழகான பறவைகள் என ஆலப்புழா ஹவுஸ்போட் பயணம் நம்மை அமைதியின் உச்சிக்கே கொண்டு சென்றுவிடும்.
அஷ்டமுடி உப்பங்கழிகள்
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள அஷ்டமுடி ஏரி இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஏரியில் பலதரப்பட்ட ஹவுஸ்போட்கள் உள்ளன.
கொச்சி உப்பங்கழிகள்
அரபிக்கடலின் ராணி என்றழைக்கப்படும் கொச்சியில் படகு சவாரி செய்து அதன் அழகில் நாமும் திளைத்துப் போகலாம். வில்லிங்டன் தீவு, உலக புகழ்பெற்ற செயின்ட் பிரான்சிஸ் தேவாலயம்
மற்றும் ஷாப்பிங்கிற்கு படகில் சென்று வரலாம்.
குமரகம் உப்பங்கழிகள்
குமரகத்தை சுற்றியுள்ள பசுமையான நெல் வயல்கள், தென்னை மரங்கள், கண்களை பறிக்கும் கிராம வாழ்க்கை என அனைத்தையும் படகில் பயணம் செய்தவாறே கண்டுகளிக்கலாம்.
திருவனந்தபுரம் உப்பங்கழிகள்
இயற்கை எழில் கொஞ்சும் திருவனந்தபுரத்தின் அழகை வளைந்து நெளிந்து செல்லும் நீர்வழிகளின் இடையே பயணம் செய்து நாமும் கண்டுகளிக்கலாம். கெட்டுவல்லோம்ஸ் என்றழைக்கப்படும் பாரம்பரிய படகுகளில் பயணம் செய்வது திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலம்.
Next story - ஸ்டார்கேஸிங் செய்ய ஜவ்வாது மலைகள் தான் சரியான இடமாம்!
ஜவ்வாது மலை பயணம்