ஸ்டார்கேஸிங் செய்ய ஜவ்வாது மலைகள் தான் சரியான இடமாம்!
இரவில் நட்சத்திரங்களை கண்டு களித்து ஸ்டார்கேஸிங் செய்ய இந்த மலைகள் தான் சரியான சாய்ஸாம்! ஏன் என்று பார்ப்போமா?
Yogalakshmy Ponnan
ஜாவதி, ஜவாது மலைகள் என்றெல்லாம் அழைக்கப்படும் ஜவ்வாது மலைகள் தமிழ்நாட்டின் வடபகுதியில் உள்ள வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவியுள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் விரிவாக்கமாகும்.
ஜவ்வாது மலைகள் வைனு பாப்பு ஆய்வகத்தின் (observatory) தாயகம் ஆகும். இது 1967 இல் நிறுவப்பட்டது.
வானில் உலாவரும் தெற்குப் பொருட்களைக் (southern objects) கவனிக்க ஒரு பெரிய வானியல் வசதியை இந்த அப்சர்வேட்டரி கொண்டுள்ளது.
இங்குள்ள தொலைநோக்கி மிகவும் சக்தி வாய்ந்தது. நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள 25 பைசா நாணயத்தைக் கூட இங்கிருந்தே நீங்கள் துல்லியமாக காணலாம்.
ஜவ்வாது மலைகளுக்கு அருகில் பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன, பீமா அருவி, கொமுட்டேரி ஏரி, மேல்பட்டு கிராமம், பசுமையான பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள் என அலாதியாக பொழுதைக் கழிக்கலாம்.
பெங்களூரில் இருந்து 180 கி.மீ மற்றும் சென்னையில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள ஜவ்வாது மலைகள் ஒரு சரியான வார இறுதி பயண சுற்றுலாத் தலமாகும்.
Next Story - கேதார்நாத் கோயில் பற்றி நீங்கள் அறிந்திராத உண்மைகள்!