Tap to Read ➤

வரவிருக்கும் புத்தாண்டை கொண்டாட பெஸ்ட் ஐடியாஸ் இதோ!

புத்தாண்டு நெருங்கிக் கொண்டே இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் பல கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் இந்த ஆண்டு அது எதுவும் இல்லாமல் வழக்கம் போல் விமர்சியாகவும் உற்சாகமாகவும் புத்தாண்டை கொண்டாட இந்த இடங்களுக்கு செல்லுங்கள் மக்களே!
Yogalakshmy Ponnan
பார்ட்டி தலைநகரமான கோவா தான் எந்தவொரு கொண்டாட்டத்திற்கும் தலைநகராக இருக்கிற நகரமாகும். பாகா கடற்கரை, கேண்டலிம் கடற்கரை, கேலங்கட் கடற்கரை, பல்வேறு வகையான பார்ட்டிகள், கொண்டாட்டங்கள் என கோவா நகரமே ஜொலிக்கிறது.
கோவா
சென்னையில் எங்கு பார்த்தாலும் வான வேடிக்கைகள், வண்ண விளக்குகள், உற்சாகமான மக்கள் வெள்ளம் என முழு நகரமே புத்தாண்டு அன்று விழாக்கோலத்தில் காட்சியளிக்கும். காஸ்ட்லியான பப்கள் முதல் இ.சி.ஆர் சாலை , மெரினா கடற்கரை வரை கொண்டாட்டம் எங்கும் காணப்படும்.
சென்னை
இந்த பிரெஞ்சு கலாச்சாரம் நிறைந்த சின்ன சிட்டி புத்தாண்டு அன்று மிகவும் உயிர்ப்புடன் காணப்படும். ராக் பீச், பாண்டி ஹார்பர் பார்ட்டிகள், வெவ்வேறு பப்கள், கஃபேக்கள், வண்ணமயமான கடற்கரைகள், தேவாலயங்கள் ஆகியவற்றிற்க்கு சென்று கொண்டாடலாம்.
புதுச்சேரி
அமைதியாக இயற்கை அன்னை மடியில் புத்தாண்டை கொண்டாட வேண்டுமா? ஊட்டிக்கு செல்லுங்கள். ரோஸ் கார்டன், தேயிலை தொழிற்சாலை & அருங்காட்சியகம், படகு சவாரி, தாவரவியல் பூங்கா என அழகாக புத்தாண்டை கொண்டாடிடுங்கள்.
ஊட்டி
புத்தாண்டு சமயத்தில் ராஜஸ்தான் மிகவும் குளிராக இருக்கும். அழகான புஷ்கர் ஏரியில் சவாரி செய்வது, பிரம்மா கோயில், சாவித்திரி மாதா கோயிலுக்கு செல்வது என அந்த நாள் மிகவும் இனிமையாக செல்லும்.
புஷ்கர்
கோவா செல்ல முடியவில்லை என்று வருத்தமா? சற்றும் அதற்கு பஞ்சமில்லாத உணர்வை நீங்கள் இங்கேயே அனுபவித்து விடலாம். துடிப்பான பார்ட்டிகள், உயிர்ப்புள்ள கடற்கரைகள், சாலையெங்கும் கூட்டம் என முழு நகரமே வேடிக்கையாக இருக்கும்.
கோகர்ணா
அழகாக அமைதியாக புத்தாண்டை வரவேற்க வேண்டும் என்ற எண்ணமா உங்களுக்கு? அபப்டியானால் நீங்கள் லட்சத்தீவுக்கு தான் செல்ல வேண்டும். ஸ்கூபா டைவிங் செய்து புத்தாண்டை புதுமையாக வரவேற்றிடுங்கள். கடல் உணவு , ஷாப்பிங்கில் ஈடுபடுங்கள்.
லட்சத்தீவு
சென்னை கடற்கரைகள்