Tap to Read ➤

மெரினா மட்டுமே சென்னையின் கடற்கரை அல்ல!

சென்னையின் கடற்கரைகள் அனைத்து விதமான பார்வையாளர்களுக்கும் சரியான வார இறுதி நுழைவாயிலாக உள்ளது. சென்னையில் பல விதமான கடற்கரைகள் உள்ளன. ஆனாலும் நமக்கு தெரிந்தது எல்லாம் மெரினா மட்டுமே! இதோ சென்னையின் உள்ள பல கடற்கரைகளின் லிஸ்ட்!
Yogalakshmy Ponnan
கோவளம் பீச்
கோவ்லாங் பீச் அல்லது கோவளம் பீச் தென் சென்னையில் மிகவும் பிரபலமானது, இது ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் கூட்டமாக இருக்கும்.
எலியட்ஸ் கடற்கரை
கடற்கரையின் அற்புதமான காட்சியை வழங்கும் சென்னையின் தூய்மையான கடற்கரைகளில் இதுவும் ஒன்றாகும். கடற்கரையில் பல்வேறு நீர் விளையாட்டுகளை அனுபவிக்கலாம் அல்லது மீன்பிடிக்கலாம்.
நீலாங்கரை கடற்கரை
கூட்ட நெரிசலை விரும்பாத மக்களுக்கு இந்த கடற்கரை ஒரு அலாதியான அமைதியை வழங்குகிறது. இங்கு நீங்கள் கடற்கரையில் காதல் நடையை அனுபவிக்க முடியும்.
ப்ரீஸீ பீச்
வாரயிறுதியை கழிக்க நீங்கள் ஒரு அழகான இடத்தைத் தேடுகிறீர்களானால், ப்ரீஸீ பீச்க்கு சென்று அதன் அருகில் அமைந்துள்ள சிறிய கஃபேக்குச் செல்லுங்கள். குதிரை சவாரி மற்றும் மாலை நடைப்பயணத்தை அதன் கடற்கரையில் அனுபவிக்கலாம்.
திருவான்மியூர் கடற்கரை
இந்த கடற்கரையில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன காட்சியை பார்ப்பது ஒரு மாயாஜால அனுபவத்தை கொடுக்கிறது.
VGP கோல்ட் பீச்
VGP கோல்ட் பீச் சென்னையின் மிகவும் சுத்தமான மற்றும் பாதுகாப்பான கடற்கரையாகும், இங்கு நீங்கள் வேடிக்கையான சவாரிகள் மற்றும் சாகச விளையாட்டுகளை அனுபவிக்க முடியும்.
பெசன்ட் நகர் கடற்கரை
இது சென்னையின் மிகவும் அழகான கடற்கரைகளில் ஒன்றாகும். பல தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.
பெப்பில் பீச்
பெப்பில் பீச் என்பது மிகவும் சிறிய கடற்கரை, ஆனால் கவர்ச்சிகரமானது. மற்ற கடற்கரைகளை விட இங்கு கூட்டம் குறைவாக இருப்பதால், சுற்றுப்புறம் மிகவும் அமைதியானது. தனிமையில் சிறிது நேரம் செலவிட இந்த இடத்திற்குச் செல்லுங்கள்.
Next Story - தமிழ்நாட்டில் உள்ள அழகிய தீவுகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
தமிழ்நாட்டின் தீவுகள்