தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள கம்மி பட்ஜெட் தேனிலவு சுற்றுலாத் தலங்கள்!
தென்னிந்தியா மிகவும் அழகான பகுதியாக பல்வேறு கண்கவர் சுற்றுலாத் தலங்களுக்கு தாயகமாக உள்ளது. அதுவும் கம்மி பட்ஜெட்டில் தேனிலவு சுற்றுலா செல்ல தென்னிந்தியாவில் எண்ணற்ற இடங்கள் உள்ளன.
ஆலப்புழா - இந்தியாவின் வெனிஸ் என்றழைக்கப்படும் ஆலப்புழாவில் உங்கள் அழகான இரவுகள் அமைதியான உப்பங்கழியில் மிதந்து கொண்டிருந்தால் அது எவ்வளவு ரொமாண்டிக்காக இருக்கும் நினைத்து பாருங்களேன்.
ஊட்டி - பிரமிக்க வைக்கும் இயற்கை காட்சிகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் குளிர்ந்த காலநிலை ஆகியவற்றைக் கொண்ட மலைவாசஸ்தலம் காதல் பயணத்திற்கு ஏற்றது.
கோவா - அதன் அழகிய கடற்கரைகள், துடிப்பான இரவு வாழ்க்கை, உற்சாகமான உணவுகள் கொண்ட கோவா ஒரு பிரபலமான தேனிலவு இடமாகும்.
கொடைக்கானல் - இயற்கை அழகு, நீர்வீழ்ச்சிகள், அமைதியான சூழல் கொண்ட கொடைக்கானல் ஒரு சரியான தேனிலவு ஸ்பாட்டாகும்.
தேக்கடி - தேனிலவை முழு அமைதியுடனும், த்ரில் ஆன நினைவுகளுடனும் கொண்டாட நீங்கள் செல்ல வேண்டிய இடம் தேக்கடி.
குடகு - காபி தோட்டங்கள், இனிமையான வானிலை, ரம்மியமான சூழலுடன் உங்களை வரவேற்கும் குடகு உங்களுக்கு ஒரு அழகான தேனிலவுக்கு வாய்ப்பளிக்கிறது.
மூணாறு - தேயிலை நடப்பட்ட மலைகள், வளைந்த சாலைகள், ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் குளிர்ந்த காலநிலை ஆகியவை மூணாரை தேனிலவுக்கு விருப்பமான இடமாக மாற்றுகிறது.
கோகர்ணா - நீங்களும் உங்கள் பார்ட்னரும் சாகச விரும்பிகளாக இருந்தால் கர்நாடகாவின் கோகர்ணாவின் சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்ந்திடுங்கள்.