Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் முதன் முதல் போட் வாட்டர் மெட்ரோ - ஏப்ரல் 25 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது!

இந்தியாவின் முதன் முதல் போட் வாட்டர் மெட்ரோ - ஏப்ரல் 25 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது!

இந்தியா போக்குவரத்து, கட்டமைப்பு, தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி என பல துறைகளில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வருகிறது. கேரளாவின் துறைமுக நகரமான கொச்சியைச் சுற்றியுள்ள பத்து சிறிய தீவுகளை இணைக்கும் நாட்டின் முதல் நீர் மெட்ரோவை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 25 ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இது இந்தியாவின் கனவு திட்டம் என்றும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும் சொல்லலாம். அழகிய இயற்கை தேசமான கேரளாவில் நீர் வழியாக சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் இந்த நீர் மெட்ரோ மூலம் சுலபமாக சுற்றிப் பார்க்கலாம்! இந்தியாவின் முதன் முதல் வாட்டர் மெட்ரோவைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ!

kochicover

நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோவை துவக்க வருகை தரும் பிரதமர்

கொச்சி தீவுகளை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் நாட்டின் முதல் நீர் மெட்ரோ சேவையை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். திங்கள்கிழமை முதல் இரண்டு நாள் கேரள பயணத்தின் போது, பிரதமர் மோடி பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுடன், மூத்த தேவாலயத் தலைவர்களுடன் சந்திப்பையும் நடத்துகிறார். பிரதமரின் வருகையையொட்டி, 2,060 போலீசார் ரோட்ஷோ நடைபெறும் பாதையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மெட்ரோ சுற்றுலா, பொருளாதாரம் மற்றும் போக்குவரத்திற்கு முக்கியத்துவம்

கொச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களுக்கு பாதுகாப்பான, மலிவு விலை மற்றும் பாக்கெட்-பிரண்ட்லி பயணத்தை வழங்குவதுடன், சுற்றுலாவையும் மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நீர் மெட்ரோ சுற்றுலா, பொருளாதாரம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக இருக்கும்.

kochiwatermetro

கொச்சி மக்களுக்கு இன்றியமையாத ஒன்று

ரயில், சாலை மற்றும் தண்ணீரை இணைக்கும் ஒருங்கிணைந்த மெட்ரோ அமைப்பு, தற்போதுள்ள போக்குவரத்து நெட்வொர்க்குகளின் நெரிசலைக் குறைக்க உதவும் பல உள்நாட்டு நீர்நிலைகளைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மாநிலத்திற்கு ஒரு விளையாட்டு மாற்றமாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர். இது கொச்சியின் அழகிய உப்பங்கழிகள் வழியாக மலிவான பயணத்தை வழங்கும்.

20 நிமிடங்களுக்குள் உயர்நீதிமன்றம் to வைபின்

வாட்டர் மெட்ரோ சேவையைப் பயன்படுத்துவதன் மூலம், உயர்நீதிமன்ற வாட்டர் மெட்ரோ டெர்மினலில் இருந்து மக்கள் 20 நிமிடங்களுக்குள் வைபினை அடைய முடியும். பயணிகள் கொச்சி 1 கார்டுகளை பயன்படுத்தி கொச்சி மெட்ரோ மற்றும் கொச்சி வாட்டர் மெட்ரோ இரண்டிலும் பயணிக்க முடியும். இந்த படகுகள் மிகவும் பயனுள்ள போக்குவரத்து முறையாக இருக்கும். இந்த திட்டத்தின் முதல் கட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது மற்றும் உயர் நீதிமன்றம்-வைபின் முனையத்தில் இருந்து வைட்டிலா-காக்கநாடு முனையத்திற்கு சேவைகளை வழங்கும்.

kochiwatermetro

வெறும் ரூ.20 கட்டணம்

உயர்நீதிமன்றத்தில் இருந்து வைபின் வழித்தடத்தில் ஒற்றை பயண டிக்கெட் கட்டணம் ரூ.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வைட்டிலாவிலிருந்து காக்கநாடு வழித்தடத்திற்கு ரூ.30 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒற்றை பயண டிக்கெட்டுகளைத் தவிர, கொச்சி வாட்டர் மெட்ரோவில் வாராந்திர, மாதாந்திர மற்றும் காலாண்டு பாஸ்களும் இருக்கும். தொடக்கச் சலுகையாக, பயணிகள் பல்வேறு பயண அனுமதிச் சீட்டுகளை வாங்குவதற்கு தள்ளுபடிகளை அறிவிக்கப்படவுள்ளது.

பயணங்களுக்கு ஏற்ற சலுகைகள்

12 பயணங்கள் கொண்ட வாராந்திர பயண அனுமதிச் சீட்டு ரூ.180 ஆகவும், 50 பயணங்கள் கொண்ட 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் மாதாந்திர பயண அனுமதிச் சீட்டு ரூ.600 ஆகவும் இருக்கும். காலாண்டு அனுமதிச் சீட்டு ரூ.1,500 ஆகவும், பயணிகள் 90 நாட்களுக்குள் 150 பயணங்களைப் பெற முடியும். மொபைல் QR டிக்கெட்டுகளை கொச்சி ஒன் ஆப் மூலம் பதிவு செய்யலாம். மேலும் ஜிட்டல் முறையிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

kochiwatermetro

அழகிய மெட்ரோ பயணம்

கேரள வாட்டர் மெட்ரோ லிமிடெட் பொது மேலாளர் கூறுகையில், பொதுத்துறையில் அதிக எண்ணிக்கையிலான படகுகள் ஒரே கடற்படையாக செயல்படுவது இதுவே முதல் முறை. படகுகள் முற்றிலும் குளிரூட்டப்பட்டதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பயணத்தை இனிமையாக மாற்றும் வகையில், இந்த படகுகளின் ஜன்னல்கள், பயணிகள் உப்பங்கழியின் காட்சியை ரசிக்கும் வகையில் அகலமாக இருக்கும்.

வாட்டர் மெட்ரோவைப் பற்றிய சுவாரஸ்யமான அம்சங்கள்

1. இந்தியாவின் முதன் முதல் வாட்டர் மெட்ரோ ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் கொச்சியில் செயல்பாட்டுக்கு வருகிறது, இதனை பிரதமர் திரு.நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

2. பயணிகள் டிஜிட்டல் முறையில் டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

3. பயணிகள் 'கொச்சி 1' என்ற ஒற்றை டிக்கெட்டை வைத்துக் கொண்டு கொச்சி மெட்ரோ மற்றும் கொச்சி வாட்டர் மெட்ரோ என இரண்டிலும் பயணிக்கலாம்.

4. முதல் கட்டமாக உயர் நீதிமன்றம்-வைபின் மற்றும் வைட்டிலா-காக்கநாடு வரை வாட்டர் மெட்ரோ இயங்கவுள்ளது.

5. கொச்சி வாட்டர் மெட்ரோவில் 78 எலக்ட்ரிக் படகுகளும், 38 டெர்மினல்களும் உள்ளன.

6. இந்தியாவின் முதல் கொச்சி வாட்டர் மெட்ரோ, பேட்டரி மூலம் இயக்கப்படும் மின்சார கலப்பின படகுகள் மூலம் செயல்படும்.

7. கொச்சி வாட்டர் மெட்ரோ கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும்.

நீங்களும் கொச்சிக்கு சென்றால் இந்த வாட்டர் மெட்ரோவில் பயணித்து உங்களுடைய அனுபவம் என்னவென்று கூறுங்கள்!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+