• Follow NativePlanet
Share
» »தஞ்சாவூர்-ஆத்தூர் 4 வழி நெடுஞ்சாலையாக மாறப் போகிறது - இனி பெங்களூரு விரைவாகச் செல்லலாம்!

தஞ்சாவூர்-ஆத்தூர் 4 வழி நெடுஞ்சாலையாக மாறப் போகிறது - இனி பெங்களூரு விரைவாகச் செல்லலாம்!

தஞ்சாவூரில் இருந்து சேலம் மாவட்டம் ஆத்தூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை (NH 136) தற்போது நான்கு வழி நெடுஞ்சாலையாக மாற்ற முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுப்பணிகள் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், கூடிய விரைவில் இந்த சாலை 4 வழி சாலையாக மாற்றப் போவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சாலையால் தஞ்சாவூர் மக்கள் மட்டுமின்றி, பெரம்பலூர் வழியாக பெங்களூர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்களும் பலன் பெறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் முக்கிய சாலைகளில் ஒன்று

NH 136 தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்ட மக்களின் அன்றாடப் பயணங்களுக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் முக்கியப் போக்குவரத்து இணைப்பாக விளங்குகிறது. இது இந்தப் பகுதிகளுக்கும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையே சரக்குகளை, குறிப்பாக விவசாயப் பொருட்களை நகர்த்துவதற்கு உதவுகிறது. கூடுதலாக, நெடுஞ்சாலை பெங்களூரு செல்லும் பயணிகளுக்கு வசதியான பாதையாக செயல்படுகிறது, பயண நேரத்தை குறைக்கிறது மற்றும் இணைப்பை மேம்படுத்துகிறது.

National highway

தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்

பெரம்பலூர் வழியாக அரியலூர், சேலம், பெங்களூரு செல்ல ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஆத்தூர்-தஞ்சாவூர் நெடுஞ்சாலையை பயன்படுத்துகின்றன. மேலும், அப்பகுதி மக்கள், விவசாயிகள், மாணவர்கள் தினமும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போதுள்ள இருவழிச்சாலை மோசமான நிலையில் உள்ளதால், சில இடங்களில் குறுகலாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பெரம்பலூர் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு நூற்றாண்டு பழமையான பாலங்களும் பலவீனமாக உள்ளதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

நீண்ட நாட்களாக கோரிக்கை

தஞ்சாவூர்-ஆத்தூர் நெடுஞ்சாலையில் தினமும் சுமார் 22,000 வணிக வாகனங்கள் செல்கின்றன. இருவழிச்சாலையில் 10,000-12,000 வாகனங்கள் சென்றால், நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்பது மிகவும் அவசியம். இங்கு செல்லும் பெரும்பாலான வாகனங்கள் கனரக வாகனங்களாக இருப்பதனால், சிறு வாகனங்கள் எதுவும் அவற்றை முந்திச் செல்ல முடியவில்லை. எனவே, இருவழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக விரைவில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

National Highway

தமிழக அரசு எடுத்த முயற்சி

தஞ்சாவூர்-ஆத்தூர் இடையே நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. சுற்றுலாத்தலமாகவும், வேளாண்மைத் தலைநகராகவும் உள்ள தஞ்சாவூர், அதிக சிமெண்ட் தொழிற்சாலை அமைந்துள்ள நகரமாகவும், வேளாண்மைத் தொழில் மிகுந்த பகுதியாகவும் உள்ள அரியலூர் நகரங்களை இணைக்கும் சாலையை நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்துமாறு தஞ்சாவூர் தமிழக அரசு சார்பில் டெல்லியில் சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

முதற்கட்ட ஆய்வு

இதனை தொடர்ந்து தஞ்சாவூர் முதல் அரியலூர் , பெரம்பலூர் வழியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் வரை சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு வழி சாலையை தற்போது நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்துவதற்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை போக்குவரத்து துறை சார்பில் தற்போது மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக ஆய்வு செய்யப்பட்டது.

விரைவில் பணிகள் துவங்கும்

தஞ்சாவூர் முதல் அரியலூர், பெரம்பலூர் வழியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் வரையிலான 100 கிமீ., தூர இரண்டுவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை ஆயத்தப்பணிகளை மேற்கொண்டுள்ளது. அதில், சென்னை தேசிய நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் பன்னீர்செல்வம் முதல்கட்டமாக, தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ ஆய்வு செய்ததுடன், கூடிய விரைவில் பணிகள் துவங்கும் என்று அறிவித்துள்ளனர்.

More News

    Read more about: nhai tamil nadu news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+