• Follow NativePlanet
Share
» »இனி சென்னையிலிருந்து திருப்பதி, பெங்களூரு, வேலூருக்கு பறக்கலாம் – வந்துவிட்டது 4 வழி நெடுஞ்சாலை!

இனி சென்னையிலிருந்து திருப்பதி, பெங்களூரு, வேலூருக்கு பறக்கலாம் – வந்துவிட்டது 4 வழி நெடுஞ்சாலை!

சென்னை, வேலூர், திருப்பதி மற்றும் பெங்களூரு இடையேயான இணைப்பை மேம்படுத்தும் வகையில், வாலாஜாபேட்டை/ராணிப்பேட்டை மற்றும் தமிழ்நாடு-ஆந்திர பிரதேச எல்லைக்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலை 40 (NH-40) பாதையை மேம்படுத்த ரூ.1,338 கோடி திட்டத்திற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த சாலை மட்டும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், சென்னையிலிருந்து நீங்கள் வெறும் 2.5 மணி நேரத்தில் வேலூரை அடைந்திடலாம் தெரியுமா?

தமிழகத்தில் புதிய நான்கு வழிச்சாலை

தமிழகத்தின் வாலாஜாபேட்டையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், இப்பகுதியில் இணைப்புகளை மேம்படுத்தவும் மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக, புதிய நான்கு வழி நெடுஞ்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நெடுஞ்சாலையானது பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும், தற்போதுள்ள வழித்தடங்களின் நெரிசலைக் குறைக்கும் மற்றும் முக்கிய தொழில்துறை மற்றும் விவசாய மையங்களுக்கு சிறந்த அணுகலை வழங்குவதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

National highway

மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

இது தொடர்பாக நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை 40 இல் வாலாஜாபேட்டை/ ராணிப்பேட்டையில் இருந்து தமிழ்நாடு-ஆந்திரப் பிரதேச எல்லை வரை 28 கிமீ தொலைவிலான நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு 1,338 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டையில் நான்கு வழி நெடுஞ்சாலை

இந்த நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக இருக்கும் என்றும் இந்த நெடுஞ்சலை, இரு மார்க்கமும் 2 வழிச் சர்வீஸ் சாலைகளை கொண்டிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். வாலாஜாபேட்டை/ ராணிப்பேட்டைக்கு 10 கிமீ புறவழிச்சாலை அமைக்கப்படும் என்றும் இந்த நெஞ்சாலையில் 4 பெரிய பாலங்கள் மற்றும் 2 ரயில்வே மேம்பாலங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

National highway

முக்கிய நகரங்களுக்கு இடையே குறையும் பயண நேரம்

மேம்படுத்தப்பட்ட நெடுஞ்சாலை சென்னை மற்றும் வேலூர் இடையிலான பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது தற்போது சுமார் 4 மணி நேரம் ஆகும். புதிய நெடுஞ்சாலை மூலம், பயணிகள் 2.5 மணி நேரத்தில் தூரத்தை கடக்க எதிர்பார்க்கலாம். இந்த திட்டம் சென்னை மற்றும் பெங்களூரு, திருப்பதி மற்றும் வேலூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராணிப்பேட்டையில் பொருளாதாரம் மேம்படும்

நெடுஞ்சாலைத் திட்டம் உள்ளூர் பொருளாதாரத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக ராணிப்பேட்டை பகுதியில், புகழ்பெற்ற கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC) மருத்துவமனை, பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) மற்றும் தோல் மற்றும் சிறிய அளவிலான பொறியியல் துறைகள். இந்தத் திட்டம் ராணிப்பேட்டையில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு (SEZ) ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2025 க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியில் பொதுமக்கள்

மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு, அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால், கடும் சிரமம் அடைந்துள்ளனர். புதிய திட்டத்தால், சென்னை மற்றும் வேலூர் இடையே சுமூகமான மற்றும் வேகமான பயணத்தை பயணிகள் எதிர்பார்க்கலாம்.

More News

    Read more about: nhai tamil nadu news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+