பரோட்டா என்றால் நம்மில் யாருக்குத் தான் பிடிக்காது. அதிலிலும் பல வகை உண்டு என நம்மில் பலருக்கு தெரியாது, இப்போது தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்!
Yogalakshmy Ponnan
மலபார் பரோட்டா
கேரளாவில் பிரபலமான இந்த மலபார் பரோட்டா மிகவும் மிருதுவாக இருக்கும். இதற்கு மட்டன் அல்லது பீஃப் கறி வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
பார்ப்பதற்கு அளவில் சிறியதாகவும் சுவையில் கிரிஸ்ப் ஆகவும் இருக்கும் இந்த காயின் பரோட்டா குற்றாலம் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் மிகவும் ஃபேமஸ்.
காயின் பரோட்டா
தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரையில் இந்த வீச் பரோட்டா மிகவும் பிரபலம். மட்டன் அல்லது சிக்கன் சால்னாவுடன் இதை சாப்பிடுவது “ஆஹா” அப்படித்தான் இருக்கும்.
வீச் பரோட்டா
இது உண்மையில் இலங்கையில் தான் ஃபேமஸ், வீச் பரோட்டா இரண்டு அடுக்குகளுடன், துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சியால் அடைக்கப்பட்டால் அதுதான் சிலோன் பரோட்டா.
சிலோன் பரோட்டா
மதுரையில் மிகவும் பிரபலமான இந்த பன் பரோட்டா, அதன் சுவையால் மதுரைவாசிகளின் இதயத்தில் நீங்காத இடம் பெற்றுள்ளது எனவே சொல்லலாம்.
பன் பரோட்டா
பரோட்டவுடன் சிக்கன், முட்டை, மசாலா வைத்து கொத்தி தரப்படும் இந்த கொத்து பரோட்டாவிற்கு இளம் ரசிகர்களின் பட்டாளமே இருக்கிறது.
கொத்து பரோட்டா
காரைக்கால் ஃபேமஸ் லாப்பா பரோட்டாவிற்கு எந்தவித சைடு டிஷ்ஷும் தேவையில்லை, அப்படியே சாப்பிடலாம்!
லாப்பா பரோட்டா
Next Story- தமிழ்நாட்டில் உள்ள டாப் 7 சுற்றுச்சூழல் சுற்றுலா தலங்கள்