Ajay Mohan       Mar 14, 2023

தமிழ்நாட்டின் அழகிய கிராமங்கள்!

 மாஞ்சோலை – திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் கிராமம்

மன்னவனூர் – திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய விவசாய கிராமம்

கூக்கால் – கொடைக்கானலுக்கு அருகே அமைதி நிறைந்த அழகிய சுற்றுலாத் தலங்கள் அடங்கிய கிராமம்

மசினகுடி – நீலகிரியின் அழகிய மலைகளுக்குள் முதுமலை தேசிய பூங்கா பகுதியில் புதைந்து இருக்கும் அழகிய கிராமம்

 சிறுமலை - மலைத்தொடர்கள், பசுமையான காடுகள், நீர்வீழ்ச்சிகள் நிறைந்த வசீகரமான கிராமம்

பூம்பாறை - பரந்த பள்ளத்தாக்கு காட்சிகள், சமவெளிகள், வரலாற்று கோயில்கள், ஏரிகள் நிறைந்த பசுமையான கிராமம்

பன்றிமலை - சுற்றிலும் பசுமை, இதமான வானிலை, லேசான சாரல், இயற்கை எழில் கொஞ்சும் சிறு சிறு சுற்றுலாத் தலங்கள் அடங்கிய அழகிய கிராமம்

ஆணைமலை – பொள்ளாச்சிக்கு அருகே அமைந்துள்ள ஆனைமலை கேரளாவின் எல்லையில் உள்ள தமிழ்நாட்டின் அற்புதமான கிராமமாகும்