சாக்லேட் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது? இந்தியாவின் பல இடங்களில் நீங்கள் மிகவும் சுவையான சாக்லேட்டுகளை ருசிக்கலாம்! இங்கே பாருங்கள்!
Yogalakshmy Ponnan
ஊட்டி - ஒரு பிரபலமான மலைவாசஸ்தலமாக இருப்பதோடு மட்டுமில்லாமல் சாக்லேட் பிரியர்களின் தாயகமாகவும் உள்ளது. இங்கு பிரத்யேகமாக தயாரிக்கப்படும் வெள்ளை, டார்க் மற்றும் டிரஃபிள் சாக்லேட்டுகளை வாங்கி மகிழுங்கள்!
மும்பை – மும்பையை சுற்றிபார்த்ததோடு மட்டுமில்லாமல் அங்கு விற்கும் பிரவுனி, கேரமல், டார்க் மற்றும் வெள்ளை சாக்லேட்டுகளை உண்ண மறந்துவிடாதீர்கள்!
கொடைக்கானல் - பிரின்சஸ் ஆஃப் ஹில்லில் கிடைக்கும் சாக்லேட்டுகளுக்கு எப்பொழுதுமே மவுசு அதிகம்! பால் சாக்லேட் க்யூப்ஸ், சாக்லேட் பூசப்பட்ட உலர் பழங்கள் மற்றும் பழங்களை நிரப்பிய சாக்லேட்டுகள் போன்ற பலவிதமான ஹோம்மேட் சாக்லேட்டுகள் இங்கு கிடைக்கும்!
புது டில்லி – பல சிறப்புகள் கொண்ட நம் நாட்டின் தலைநகரில் சாக்லேட்களும் மிகவும் பிரபலம் தான்! இங்கு சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பேக்கரிகளின் சாக்லேட்கள் மிகவும்ஃபேமஸ்!
லோனோவாலா – மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இந்த அழகிய மலைவாசஸ்தலம் சுவைமிக்க சாக்லேட்களுக்கும் பிரபலமாகும். இங்கு கிடைக்கும் சாக்லேட் ஃபட்ஜ், வெள்ளை, டார்க், மில்க் மற்றும் நட்ஸ் சாக்லேட்டுகளின் சுவையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது!
அரக்கு பள்ளத்தாக்கு – அரக்கு பள்ளத்தாக்கில் கிடைக்கும் காபி சாக்லேட்டுகள் நாடெங்கிலும் மிகவும் பிரபலம்!