Tap to Read ➤

திருப்பதி உண்டியலுக்குள் இப்படி ஒரு ரகசியமா?

திருப்பதி உண்டியலில் தினமும் பல கோடிகள் காணிக்கையாக சேருவதைப் பற்றி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் அதன் பின்னணியில் உள்ள காரணம் நமக்குத் தெரியுமா? ஆம், ஒரு காரணம் இருக்கிறது. அதுவும் பகவான் வேங்கடேசப் பெருமானால் அறிவுறுத்தப்பட்டதாம்.
Yogalakshmy Ponnan
யசோதா தாய் பகவான் கிருஷ்ணரின் திருமணத்தை பார்க்க முடியவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டாராம்.
அதற்கு வேங்கடேசப் பெருமான் தான் கலியுகத்தில் பிறந்து மறுபடியும் லட்சுமி தேவியை மணப்பெண் என்றும் அதை நீங்கள் பார்த்து மகிழலாம் என்றும் கூறினாராம்.
வேங்கடேசப் பெருமான் ஸ்ரீநிவாஸனாக அவதாரம் எடுத்து பத்மாவதியான லட்சுமி தேவியை மணந்து கொள்ள முடிவு செய்கிறார்.
பத்மாவதியின் தந்தை ஆகாசராஜன் திருமணத்தின் முழு செலவையும் வேங்கடேசப் பெருமானே ஏற்க வேண்டும் என்று கூறிவிட்டாராம்
திருமணத்திற்காக ஸ்ரீனிவாசன் குபேரனிடம் கடன் வாங்குகிறாராம். குபேரன் சீனிவாசனுக்கு 14 லட்சம் ராமர் முத்திரை நாணயங்களை கடனாக கொடுக்கின்றார்.
கலியுகத்தின் இறுதிக்குள் கடனைத் திருப்பித் தருவதாக குபேரனிடம் வேங்கடேசப் பெருமான் உறுதியளித்துள்ளாராம்.
வெங்கடேசப் பெருமாளின் கடனை திருப்பி செலுத்தவே பக்தர்கள் காணிக்கை கொடுக்க ஆரம்பித்தனராம். அந்த பழக்கமே இன்றளவும் நடைமுறையில் இருந்து வருகிறதாம். ஆனாலும் இன்றும் கடன் தீரவில்லையாம்!
அனுமதி அவசியம்