Ajay Mohan       Feb 22, 2023

தமிழ்நாட்டின் தலைநகராக சென்னை பல தரப்பட்ட மக்களுக்கு அடைக்கலமாக  இருக்கிறது. இதனால் பல விதமான பழக்கவழக்கங்களையும், பண்பாட்டையும் நாம்  அறிந்துக் கொள்வதோடு, பல வகையான உணவுகளையும் ருசிக்கிறோம்! சென்னையில்  நீங்கள் ட்ரை பண்ண வேண்டிய உணவுகளின் லிஸ்ட் இதோ!

அந்த காலத்து பர்மா குடியேற்றத்தின் விளைவாக சென்னையில் பிரபலமான அத்தோ, பேஜோ, மொய்யோ சென்னை மக்களுக்கு மிகவும் இஷ்டமாகும்.

அத்தோ

சென்னை கடற்கரைகளில் சூடான பட்டாணி அல்லது வேர்க்கடலையுடன் வெங்காயம்,  கொத்தமல்லி, பொறி, தக்காளி, மாங்காயுடன் பரிமாறப்படும் சுண்டலுக்கு ஒரு  ரசிகர் கூட்டமே உண்டு.

பீச் சுண்டல்

திண்டுக்கல், ஆம்பூர், ஆற்காடு என பல ஊர்களின் பிரியாணி வகைகளை விடவும் ருசியாக இருக்குமாம் இந்த சென்னை பிரியாணி.

சென்னை பிரியாணி

மதுரை பன் பரோட்டா முதல், நெய் பரோட்டா, சிலோன் பரோட்டா, நூல் பரோட்டா,  குற்றாலம் காயின் பரோட்டா வரை எல்லாமும் சென்னையில் கிடைக்கிறது.

பரோட்டோ

சென்னைக்கு புதிதாக வருகை தரும் எவரும் இந்த சென்னை பேமஸ் கறி தோசையை சுவைக்காமல் திரும்பக் கூடாது.

கறி தோசை

உருளைக்கிழங்கு, இம்லி சட்னி, ரக்தா, பச்சை சட்னி மற்றும் சில நேரங்களில்  வெங்காயம் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட இந்த சிறிய சுவையான பூரிகள் யாருக்குத்  தான் பிடிக்காது.

பானி பூரி

ஆலு சாட், சனா சாட் மற்றும் பப்டி சாட் போன்ற பல சாட்கள் சென்னை மக்களுக்கு பிடித்த சாட் வகைகளாகும். Chaat

சாட்

இது புதிது கிடையாது, ஆனாலும் சென்னை இட்லி சாம்பார் வடைக்கு எதுவுமே நிகரல்ல.

இட்லி

சென்னையில், பல்வேறு வகையான குல்ஃபிகளை முயற்சிப்பதற்காக மக்கள் சிறிய  கடைகளில் அல்லது சாலையோரக் கடைகளில் வரிசையாக நிற்பதைக் காணலாம்.

குல்பி

இந்த அட்டகாசமான உணவை நீங்கள் சென்னை மரினா, காசிமேடு, பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு செல்ல வேண்டும்.

சென்னை மீன் வறுவல்