Madhu AS       Mar 23, 2023

ஆஸ்கர் விருது பையில் ஒரு கோடி மதிப்புள்ள பரிசுப்பொருட்கள்!

ஆஸ்கருக்கு நாமினேட் செய்யப்பட்டவர்களுக்கும், அதில் வெற்றிப் பெற்றவர்களுக்கும் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் பரிசாக கொடுக்கப்படுகின்றன. 

மார்ச் 13 ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியா சார்பில் RRR மற்றும் The elephant whisperers ஆஸ்கர் விருது பெற்றன

அன்று முதல் இணையத்தில் எங்கு பார்த்தாலும் ஆஸ்கரில் பங்குபெற்றவர்களுக்கு வழங்கப்படும் பரிசுப்பொருட்கள் அடங்கிய பை வைரலாகி வருகிறது

 ஆஸ்கருக்கு நாமினேட் செய்யப்பட்டவர்களுக்கு சுமார் 1.03 கோடி மதிப்புள்ள 60 வகையான பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.

 அதில் கனடாவில் உள்ள “lifestyle” எஸ்டேட்டிற்கு சுற்றுலா செல்வதற்கான செலவு ரூபாய் 32 லட்சம் இந்திய மதிப்பில் கொடுக்கப்படுகிறது

குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அதிகபசட் மாக 8 பேருடன் இத்தாலி சுற்றுலா செல்வதற்கான டூர் வவுச்சர்

ஆஸ்திரேலியாவில் ஒரு சதுர மீட்டருக்கு நிலம், ஆனால் இந்த நிலத்தை மரக்கன்று நடுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமாம்.

    சேதமடைந்த வீடுகளை புனரமைத்துக்கொள்ள ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள கூப்பன்.

ஜப்பானில் மிகவும் பிரபலமான பால் ரொட்டி, அழகு சாதனா பொருட்கள், பயணத்தின்போது பயன்படுத்தும் பொருட்கள் போன்றவையும் இந்த பரிசு தொகுப்பில் அடங்கும்.

இந்த பரிசு பொருட்களை வாங்கும் பச்சத்தில் அதற்க்கான வரியையும் வழங்க வேண்டும்