நீங்கள் பல தலைமுறைகளாக சென்னையில் வாழ்பவரா? உங்களுக்கு சென்னையைப் பற்றி எல்லாமும் தெரியுமா மக்களே? வாருங்கள் டெஸ்ட் பண்ணிடுவோம்!
Yogalakshmy Ponnan
முதல் உலகப்போரில் தாக்கப்பட்ட இந்தியாவின் ஒரே நகரம் சென்னை தான்!
மதராஸ் பல வம்சங்களின் கீழ் ஆளப்பட்டது, சோழர், பல்லவர்கள் மற்றும் விஜயநகர நாயக்கர்கள் போன்ற பல்வேறு இந்திய ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் சென்னை காளிகாம்பாள் கோவிலை வழிபட்டுள்ளார்.
1522 இல், முதன்முதலில் போர்த்துகீசிய வணிகர்கள் மெட்ராஸில் குடியேறினர்.
இந்தியாவின் மூன்று பிரசிடென்சி வங்கிகளில் மெட்ராஸ் வங்கியும் ஒன்று. இது 1843 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
சுதந்திர இந்தியாவில் முதன்முதலில் பறந்த பெருமைமிக்க மூவர்ணக் கொடி 150 அடி ஆகும். மற்றும் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தக் கொடி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பாதுகாக்கப்படுகிறது.
சென்னையின் பெருமையான மெரினா கடற்கரை இந்தியாவின் மிக நீளமான இயற்கை நகர்ப்புற கடற்கரையாகும். அது 13 கிமீ நீளம் மற்றும் உலகின் 2வது பெரிய கடற்கரை என்பது குறிப்பிடத்தக்கது!!!