Ajay Mohan       Feb 22, 2023

சென்னையில் கடற்கரைகள், கோவில்கள், மால்கள், கோட்டைகள், பிசியான வீதிகள் என இந்த நகரம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாலும் இது காதல் தலைநகரமாகவும் உள்ளது தெரியுமா. இவைகள் தான் சென்னையின் டாப் ரொமாண்டிக் இடங்கள்!

இந்தியாவின் மிக நீண்ட கடற்கரையான மரினாவில் உங்கள் துணையுடன் சேர்ந்து சூரிய அஸ்தமனம் கண்டு களியுங்கள்.

மரினா கடற்கரை

சுற்றிலும் அழகிய இயற்கை காட்சிகள் மற்றும் விலங்கினங்களுக்கு மத்தியில் உங்கள் அன்புக்குரியவருடன் நேரத்தை செலவிட தேசிய பூங்கா எப்போதும் சிறந்த இடமாகும்.

கிண்டி தேசியப்பூங்கா

உங்களின் துணை கலைநயமிக்க நபராக இருந்தால், கைவினைப்பொருளைப் பரிசளித்து, நினைவுகளை உருவாக்குங்கள். இந்த இடத்தில் அழகிய போட்டோக்களும் எடுக்கலாம்.

தக்சின் சித்ரா

உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை செலவழிக்க முட்டுக்காடு செல்லுங்கள். முட்டுக்காடு உப்பங்கழியானது ஒரு ரொமாண்டிக் ஆன வைபை கொடுக்கிறது.

முட்டுக்காடு

பெசன்ட் நகர் கடற்கரையில் உங்கள் துணையுடன் கை கோர்த்து நடந்து அழகிய நினைவை உருவாக்குங்கள்.

பெசன்ட் நகர் பீச்

காதல் பயணத்திற்கு ஏற்ற மிகவும் அமைதியான இடமாக இருக்கும் புலிகாட் ஏரியில் போட்டிங் சென்று, பறவைகளை பார்த்து மகிழுங்கள்.

புலிகாட் ஏரி

உங்களது துணை விலங்குகளை பார்த்து ரசிப்பவர் என்றால், நீங்கள் கட்டாயம் வண்டலூர் பூங்காவிற்கு சென்று வாருங்கள்.

அண்ணா உயிரியல் பூங்கா

சென்னையில் உள்ள பல கடற்கரைகளில் மிகவும் அழகானது இந்த எலியாட்ஸ் கடற்கரைதான்! இங்கு செல்ல தவறாதீர்கள்!

எலியாட்ஸ் கடற்கரை