இந்த இடம் தான் தென்னிந்தியாவின் காஷ்மீராம்- அடேங்கப்பா எவ்வளவு அழகாக இருக்கிறது!
கடவுளின் சொந்த தேசம் என்றழைக்கப்படும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துக்ள்ள அழகிய மலைப்பிரதேசமான மூணாறு தென்னிந்தியாவின் காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. ஏன்???
கேரளாவே அதன் மாயாஜால அழகுக்காக அறியப்பட்டாலும், மூணாறு கேரளாவிலேயே அதிகம் பார்வையிடப்படும் மலை வாசஸ்தலங்களில் ஒன்றாகும்
மேற்கு தொடர்ச்சி மலையில் 6,000 அடி உயரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது இந்த அழகிய மலைவாசஸ்தலம்.
இது எங்கிருந்தும் வரும் பயணிகள், பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு உண்மையான சொர்க்கமாக உள்ளது.
முத்திரபுழா, நல்லதண்ணி மற்றும் குண்டலி ஆகிய மூன்று ஆறுகள் சந்திக்கும் இடத்தில் மூணாறு அமைந்துள்ளது.
மூணாறில் இருக்கும் அழகிய தேயிலைத் தோட்டங்கள், காடுகள், பூங்காக்கள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் யாவும் மிகவும் ரம்மியமாக இருக்கின்றன.
மூணாறில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 20 டிகிரி வரை செல்சியஸ் வரை செல்கிறது.
எப்பொழுதுமே குளிர்ச்சியாக இருக்கும் மூனாறின் வானிலை குளிர் காலங்களில் உறைபனி நிலைக்கு சென்று விடுகிறது.
இதனாலேயே மூணாறு தென்னிந்தியாவின் காஷ்மீர் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது
Next – கோடை 2023: சென்னை to மூணாறு – பயணம், சுற்றிப் பார்க்கும் இடங்கள், செலவுகள்!