Search
  • Follow NativePlanet
Share
» »கோடை 2023: சென்னை to மூணாறு – பயணம், சுற்றிப் பார்க்கும் இடங்கள், செலவுகள்!

கோடை 2023: சென்னை to மூணாறு – பயணம், சுற்றிப் பார்க்கும் இடங்கள், செலவுகள்!

நாம் ஏற்கனவே கோடை 2023 என்ற தலைப்பின் கீழ் சென்னையிலிருந்து ஊட்டி, கொடைக்கானலுக்கு கம்மி பட்ஜெட்டில் சுற்றுலா செல்வது பற்றி பார்த்தோம் அல்லவா! இப்போது இந்த கட்டுரையில் சென்னையிலிருந்து மூணாறுக்கு குறைவான பட்ஜெட்டில் சுற்றுலா எப்படி செல்லுவது என்று பார்ப்போம். சரியாக திட்டமிட்டால் இந்த கோடையை மூணாறில் அசத்தலாக அனுபவிக்கலாம். சென்னையிலிருந்து மூணாறுக்கு பஸ் மற்றும் ரயில் பயணம், மூணாறில் உள்ள தங்குமிடங்கள், எந்தெந்த இடங்களைச் சுற்றி பார்ப்பது குறித்து இங்கே காண்போம்!

munnarteaestatae

சென்னை to மூணாறு பஸ் பயணம்

சென்னையிலிருந்து மூணாறு 600 கிமீ தொலைவில் கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து மூணாறுக்கு தமிழக அரசு பேருந்துகள் 2 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ரூ.600 கட்டணத்தில் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்பொழுது இயக்கப்படுவது இல்லை, நீங்கள் பிரைவேட் டிராவல்ஸில் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். குறைந்தபட்சம் ரூ.900 இல் இருந்து ரூ.2000 வரை ரேஞ்சில் டிக்கெட்கள் உள்ளன. அதோடு மட்டுமில்லாமல் சென்னையிலிருந்து தேனி அல்லது குமுளிக்கு நீங்கள் தமிழக அரசு பேருந்தில் செல்லலாம். அதற்கான கட்டணம் ரூ.500 இல் இருந்து ஆரம்பிக்கிறது. அங்கிருந்து நீங்கள் கேரள அரசு பேருந்திலோ அல்லது தமிழக அரசு பேருந்திலோ மூணாறை அடையலாம்.

, Chennai to Munnar, Tamilnadu

சென்னை to மூணாறு ரயில்/ விமானப் பயணம்

மூணாறுக்கு நேரடியாக ரயில் சேவை கிடையாது. ஆனால் எர்ணாகுளம் அல்லது அலுவா ரயில் நிலையம் மூணாறுக்கு அருகில் உள்ள ரயில் நிலையங்களாகும். நீங்கள் அங்கு இறங்கி பேருந்தில் செல்லலாம். சென்னை சென்ட்ரலிலிருந்து அலுவாவிற்கும் எர்ணாகுளத்திற்கும் தினமும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. Alleppey Exp, MAS Tvc mail, DHN Alappuzha, MS Guruvayur ஆகிய ரயில்கள் தினமும் இயங்குகின்றன. அலுவா செல்லுவதற்கான கட்டணம் ரூ.405 ஆகும்.

இவை எதுவும் வேண்டாம், விரைவாக செல்ல வேண்டும் என்றால் நீங்கள் விமானப் பயணத்தை தேர்வு செய்து கொள்ளலாம். மூணாறுக்கு அருகில் உள்ள விமான நிலையம் கொச்சி விமான நிலையம் ஆகும். விமான டிக்கெட் ரூ.3000 இருந்து ஆர்மபிக்கிறது. உங்களுக்கு மலிவான டிக்கெட் புக் செய்ய வேண்டுமென்றால் முந்திக் கொள்வது நல்லது.

munnarfalls1

மூணாறில் மலிவான தங்குமிடங்கள் புக் செய்வது எப்படி

மூணாறு தென்னிந்தியாவின் பிரபலமான ஒரு பிரதான சுற்றுலாத் தலம் என்பதால் ஏகப்பட்ட ஹோட்டல்களும், ஹோம் ஸ்டேகளும் உள்ளன. உங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றார்போல் நீங்கள் உங்கள் தங்குமிடங்களை புக் செய்து கொள்ளலாம். Munnar ice queen resorts, Edens munnar, Kurinji wanderlust munnar, K mansion, Maliyeckal homestay, Gokulam homestay, Santhi hill view resort போன்ற பட்ஜெட் பிரண்ட்லி ஹோட்டல்களை புக் செய்யலாம். அல்லது நீங்கள் கம்மி பட்ஜெட்டின் மூணாறில் ரூம் புக்கிங் செய்ய ஹோட்டல் புக்கிங் இணையத்தளங்களை (Hotel booking service providers) கூட பார்வையிடலாம்.

munnartrek1

மூணாறில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்

இயற்கையின் அழகிய காட்சிகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் மூணாறின் வசீகரமான சுற்றுலாத்தலங்கள் அனைவருக்கும் புத்துணர்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

1) எக்கோ பாயிண்ட் - எதிரொலிக்கும் நிகழ்வின் அற்புதமான விளக்கத்திற்காக நன்கு அறியப்பட்ட இந்த இடம் பசுமையான மரங்களால் சூழப்பட்ட ஒரு விசித்திரமான ஏரி மற்றும் மூடுபனி மலைகளின் மடியில் அமைந்துள்ளது.

2) இரவிகுளம் தேசிய பூங்கா - மூணாறிலிருந்து 45 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ள இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு சென்று மேற்கு தொடர்ச்சி மலைகளின் பசுமை மற்றும் யானை, நீலகிரி லங்கூர், நீலகிரி மார்டன், அட்லஸ், நீர்நாய், புலி, சிறுத்தை ஆகியவற்றை பார்த்து ரசிக்கலாம்.

3) அட்டுக்காடு நீர்வீழ்ச்சி - சாகச ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலமான அட்டுக்காடு நீர்வீழ்ச்சி, மிகவும் கண்கவர் சூழலில் அமைந்துள்ளது. மலையேற்றம், அங்கிருக்கும் சிறு சிறு குளங்களில் குளிப்பது, குளிரான சூழலில் அமர்ந்து நீர்வீழ்ச்சியை ரசிப்பது என அருமையாக பொழுதை கழிக்கலாம்.

4) பொத்தமேடு வியூபாயின்ட் - இந்த வியூபாயின்ட்டில் இருந்து முத்திரபுழா ஆறு, இடுக்கி ஆர்ச் அணை, டீ, காபி, ஏலக்காய், மிளகு தோட்டங்கள் என மலைகள் முழுவதும் பச்சைப் போர்வையைப் போர்த்திக் கொண்டிருப்பதை பார்த்து ரசிக்கலாம்.

5) ட்ரீ ஹவுஸ் ஸ்டே - பசுமையான மசாலா தோட்டங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள ட்ரீ ஹவுஸில் தங்கி இயற்கையை அனுபவிக்கலாம்.

6) ரோஸ் கார்டன் - 2 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ள மூனாரின் ரோஸ் கார்டன் மசாலாப் பொருட்கள், ஏலக்காய், மிளகு மற்றும் பிற வாசனைப் பொருட்களின் செடிகள், பலவிதமான பழ மரங்கள் உட்பட பல்வேறு தாவரங்களால் நிறைந்துள்ளது.

7) மாட்டுப்பட்டி அணை - இந்த பிக்னிக் ஸ்பாட் வேகப் படகு சவாரி மற்றும் குதிரை சவாரி போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்காக பார்வையாளர்களிடையே பிரபலமானது.

8) டாப் ஸ்டேஷன் - டாப் ஸ்டேஷன் என்பது மூணாறில் 6276 அடி உயரத்தில் உள்ள மிக உயரமான இடமாகும். இங்கு இருந்து முழு மூனாறின் அழகையும் நீங்கள் ரசிக்கலாம்.

munnarjeepsafari1

9) டாடா டீ மியூசியம் - நல்லதண்ணி தோட்டத்தில் அமைந்துள்ள இந்த டீ மியூசியத்திற்கு, பழங்கால பொருட்களை ஆராய, தேயிலை எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள அனைவரும் வருகை தர வேண்டும்.

10) வொண்டர் வேலி அட்வென்ச்சர் பார்க் - டாஷிங் கார்கள், 12டி ரைடர், ஜிப் லைன், சார்லி சாப்ளின் வாக் மற்றும் இயற்கை நீர்வீழ்ச்சி போன்ற எண்ணற்ற வேடிக்கையான செயல்களை ஒரே இடத்தில் நீங்கள் அனுபவிக்கலாம்.

11) கார்மேலகிரி யானைகள் பூங்கா - பசுமையான வனப்பகுதியில் யானைகளுடன் பழகுவது, அதன் மேல் ஏறி சவாரி செய்வது இந்த இடத்தின் சிறப்பம்சமாகும்.

12) சீயப்பாரா நீர்வீழ்ச்சி - ஏழு அடுக்களைக் கொண்டு ஆர்பரித்துக் கொட்டும் இந்த நீர்வீழ்ச்சி மூணாறில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும்.

13) ஆனைமுடி சிகரம் - ஆசிய யானைகளின் மிகப்பெரிய மக்கள்தொகையின் இருப்பிடமாக அறியப்படும் இந்த இடம் ஒரு புகழ்பெற்ற ட்ரெக்கிங் ஸ்பாட் ஆகும்.

14) சின்னகாணல் நீர்வீழ்ச்சி - தேக்கடிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த அழகிய நீர்வீழ்ச்சி குளிக்க, இளைப்பாற, போட்டோ எடுக்க ஏற்ற இடமாகும்.

15) சலீம் அலி பறவைகள் சரணாலயம் - தமிழில் பறவை மனிதன் தொடர்பாக வெளிவந்த ரோபோ முன்னோடியான சலீம் அலியை வைத்து எடுக்கப்பட்டது தான். கிரிம்சன்- பார்பெட், பீ-ஈட்டர், சன்பேர்ட், ஷ்ரைக், பிளாக் விங்குடு கைட், நைட் ஹார்ன் ஆகிய அரிய பறவைகளை இங்கே நீங்கள் காணலாம்.

மேற்கூறியவை மட்டுமல்லாமல் குண்டலா அணை, சின்னாறு வனவிலங்கு சரணாலயம், மறையூர், லாக்கோம் நீர்வீழ்ச்சி, ப்ளாசம் பார்க், மீசபுளிமாலா, மாட்டுப்பட்டி பால் பண்ணை மற்றும் பல நீர்வீழ்ச்சிகளையும் நீங்கள் கண்டு களிக்கலாம். தேயிலை தோட்டங்களில் நடைபயணம், வனப்பகுதிகளுக்குள் ஜீப் சவாரி, முக்கியமாக மூணாறில் ஷாப்பிங் செய்ய மறக்காதீர்கள்.

munnarelephnatsafari1

பயணத்திற்கு ஆகும் செலவுகள்

மூணாறில் உள்ள சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கு 4 இல் இருந்து 5 நாட்கள் தாராளமாக எடுக்கும். கோடை விடுமுறை வருவதற்கு நேரம் இன்னும் இருப்பதால் அழகாக யோசித்து பஸ் அல்லது ரயில் டிக்கெட், ரூம் புக்கிங், ட்ராவல் கைடு ஆகியவற்றை புக் செய்து கொள்ளலாம். எடுத்துகாட்டாக நீங்கள் உங்கள் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சுற்றுலா பிளான் பண்ணுகிறீர்கள் என்றால், கம்மி பட்ஜெட்டில் இந்த சுற்றுலாவை முடிக்க ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை செலவாகும். இந்த பட்ஜெட் ரயில் அல்லது பேருந்தில் பயணம் செய்தால் மட்டுமே, நீங்கள் விமானத்தில் சென்றால் கூடுதலாக ஒரு நபருக்கு ரூ.7000 அதிகரிக்கும். என்ன பயணிகளே, இந்த கோடையை மூணாறில் என்ஜாய் பண்ணலாமா?

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+