Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஏற்காடு » வானிலை

ஏற்காடு வானிலை

ஏற்காடு ஒரு மலை வாசஸ்தலம் எனினும்,  தீவிர வெப்ப நிலை மாற்றம் இங்கு இருப்பதில்லை. ஆண்டு முழுவதும் லேசான மற்றும் இதமான வெப்ப நிலையே இங்கு காணப்படுகிறது. ஏற்காட்டின் சராசரி அதிகபட்ச வெப்ப நிலை 28 ° செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச சராசரி வெப்ப நிலை 15 ° செல்சியஸ் ஆகும். ஏற்காட்டை சுற்றி பார்க்க பருவ மழையை தவிர்த்து அக்டோபர் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான நாட்கள் மிக சிறந்த பருவமாகும்.

கோடைகாலம்

ஏற்காட்டில் இதமான கோடைகாலம்  வழக்கமாக மார்ச்  தொடங்கி  ஜூன் வரை தொடர்கிறது.  வழக்கமான கோடை  நாட்களில் இங்கு  காணப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை 30 ° C ஆகும்.  கோடை காலத்தில் குறைந்த அளவு மழை இருக்கும் மற்றும் ஈரப்பதம் அதிகரித்து காணப்படும். இரவு குளிர் காற்று காரணமாக சற்று குளிராக காணப்படலாம்.

மழைக்காலம்

ஏற்காட்டில் பருவமழை ஜூலையில் தொடங்கி செப்டம்பரில் பலத்த மழைப் பொழிவை பெறுகிறது. அப்போது ஏற்காட்டில் கடுமையான மழையுடன், பலத்த காற்றும் வீசக்கூடும். ஏற்காட்டின் சராசரி  மழையின் அளவு 279 மி.மீ ஆகும். வெப்பநிலை இயல்பாகவே குறைந்து  14 °  செல்சியஸ் முதல் 20 ° செல்சியஸ் வரை இருக்கும். ஈரப்பதம் அதிகரிப்பதின் விளைவாக பகல் நேரத்தில் வெப்பம் இயல்பை விட அதிகமாக காணப்படும்.

குளிர்காலம்

குளிர் காலம் நவம்பரில் ஆரம்பித்து பிப்ரவரியில் முடிகிறது. குளிர்காலத்தில் மூடுபனி மற்றும் குளிர் இருக்கும். ஜனவரி மிகவும் குளிரான மாதம், அப்போது இரவு வெப்ப நிலை 10 ° செல்சியஸிற்கும் குறைவாக காணப்படும். பகல் நேர வெப்ப நிலை 25 ° செல்சியஸ் வரை உயர்கிறது.