Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிதம்பரம் » ஈர்க்கும் இடங்கள் » அண்ணாமலை பல்கலைக்கழகம்

அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்

20

சிதம்பரம் நகரின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்ட இந்த அண்ணாமலை பல்கலைக்கழகம் மிகப்பழமையான பாரம்பரியமிக்க கல்வி நிறுவனமாகும். கலை, அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் தொலைதூரக்கல்வி போன்ற விரிவான தளங்களில் தனது உன்னதமான பங்களிப்பை இந்த கல்வி நிறுவனம் மாநில அளவில் தேசிய அளவிலும் வழங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்துடன் தனது குடையின் கீழ் பல கல்லூரிகளையும் கொண்டுள்ளது.

சிதம்பரம் நகருக்கு கிழக்கே 1500 பரப்பளவில் பரந்து காணப்படும் அண்ணாமலைநகர்  எனும் பிரத்யேக நகர்ப்பகுதியில் பிரம்மாண்டமான இந்த பல்கலைகழகம் அமைந்துள்ளது.

1928ம் ஆண்டில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களால் துவங்கப்பட்ட இந்த பல்கலைகழகம் ஒரு விசேஷ சட்ட உரிமையின் மூலம் அண்ணாமலை செட்டியார் குடும்பத்தாரே தொடர்ந்து இணைவேந்தர் பொறுப்பில் நிர்வகிக்கக்கூடிய தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகமாக அங்கீகாரம் பெற்றுள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி செயல்பாடுகளுக்கென ஷார்ஜா, மஸ்கட், துபாய் மற்றும் டொரண்டோ போன்ற வெளிநாட்டு நகரங்களில் கல்வி மையங்கள் திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெவ்வேறு துறைகளுக்கான பிரத்யேக வளாகங்கள், மாணவர்கள் தங்குவதற்கான வசதியான விடுதி மாளிகைகள், பிரம்மாண்டமான மைய நூலகம் போன்றவற்றை இந்த பல்கலைக்கழக வளாகத்தில் காணலாம். சிதம்பரம் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் திருவேட்களம் எனும் கோயில் தலத்தை ஒட்டி இந்த அண்ணாமலை நகர் அமைந்துள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Apr,Wed
Return On
09 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Apr,Wed
Check Out
09 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Apr,Wed
Return On
09 Apr,Thu