இந்தியாவின் 10 பிரபலமான நந்தி சிலைகள்!!!
தேடு
 
தேடு
 
Share

இடுக்கி வில்லணை, இடுக்கி

கண்டிப்பாக பார்க்க வேண்டியவை

ஒவ்வொரு நாளும் ஏராளமான பார்வையாளர்களை உள்ளூர் மற்றும் வெகுதூரத்திலிருந்தும் ஈர்க்கும் இந்த இடுக்கி வில்லணை ஆசியாவிலேயே இது போன்று அமைக்கப்பட்ட முதல் அணை என்ற சிறப்பை மட்டுமல்லாமல், உலகிலேயே இரண்டாவது பெரிய வில்லணை என்ற புகழையும் பெற்றுள்ளது.

இடுக்கி புகைப்படங்கள் - இடுக்கி வில்லணை

பெரியார் ஆற்றின் குறுக்கே குருவமலை மற்றும் குறத்திமலை என்ற இரு மலைகளை இணைத்து இந்த கம்பீரமான அணை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அணையின் கீழ்ப்பகுதியிலிருந்து மேல் நோக்கி பார்க்கும்போது மயிர்க்கூச்செரிய வைக்கும் மஹா பிரம்மாண்டத்துடன் இது காட்சியளிக்கிறது.

வழக்கமாக அமைக்கப்படும் நேரான அணைகளைவிட சிக்கலான கட்டுமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த அணையை பார்க்கும்போது மனித முயற்சியால் என்னென்ன ஆக்கப்படைப்புகள் சாதிக்கப்பட்டிருக்கின்றன என்று எண்ணி வியக்காமல் இருக்க முடியாது.

இந்த அணை ஒரு ஒருங்கிணைந்த நீர்மின்னுற்பத்தி நிலையமாகவும் செயல்படுகிறது. 5ஆறுகள், 20 துணை அணைகள், ஒரு சுரங்கத்தள மின்னுற்பத்தி இயந்திர மையம் மற்றும் பல சுரங்கத்தள பாதைகள் ஆகியவை இந்த இடுக்கி அணையின் முக்கியமான அங்கங்களாகும்.

650 அடி பரப்பளவில் 550 அடி உயரத்தில் இந்த அணை வீற்றுள்ளது. செறுதோணி அணைத்தடுப்பு மற்றும் இடுக்கி காட்டுயிர் சரணாலயம் போன்ற ஸ்தலங்களுக்கு அருகிலேயே இந்த அணை அமைந்துள்ளது.

உலகிலேயே இரண்டாவது விசேஷமான அணை என்ற புகழ் மட்டுமல்லாமல், அணையைச் சுற்றிலுமுள்ள இயற்கை எழிலுக்காகவும் இடுக்கி அணை பிரசித்தி பெற்றுள்ளது.

இந்த அணைப்பகுதியிலிருந்து எங்கு திரும்பி பார்த்தாலும் நம் கண்ணை அகற்ற முடியாத அளவுக்கு சுற்றிலும் இயற்கை எழில் அம்சங்கள் நிரம்பி வழிகின்றன. இடுக்கி அணைப்பகுதிக்கு விஜயம் செய்ய ஆகஸ்ட் முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட பருவம் மிக உகந்ததாகும்.

இக்காலத்தில் அணையிலிருந்து நீர் சீறிப்பாயும் அற்புதக்காட்சியை பார்த்து ரசிக்கலாம். தென்னிந்தியாவிலுள்ள சுற்றுலா ரசிகர்கள் அனைவரும் ஒரு முறையாவது விஜயம் செய்தே ஆக வேண்டிய விசேஷ ஸ்தலம் இந்த இடுக்கி அணையாகும்.

Share
Write a Comment

Please read our comments policy before posting

Click here to type in tamil