Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அடூர் » வானிலை

அடூர் வானிலை

அடூர் நகரின் கோடை காலங்களில் வெயில் சுட்டெரிப்பதோடு, அதன் மழைக் காலங்களில் கடுமையாக மழை கொட்டித் தீர்க்கும். எனவே அடூர் நகருக்கு சுற்றுலா வருவதற்கு அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான காலங்களே சிறந்தது.

கோடைகாலம்

(பிப்ரவரி முதல் மே வரை) : அடூர் நகரின் கோடை காலங்களில் சிலசமயம் வெப்பநிலை 31 டிகிரியை கூட தாண்டி விடும். எனவே சுட்டெரிக்கும் கோடை காலத்தில் அடூர் நகருக்கு சுற்றுலா வருவதை பயணிகள் தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : அடூர் நகரின் மழைக் காலங்களில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக கடும் மழைப் பொழிவு இருக்கும். எனவே கன மழை கொட்டித் தீர்க்கும் ஜூன்  மற்றும் ஜூலை மாதங்களில் அடூர் நகருக்கு சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் ஜனவரி வரை) : அடூர் நகரின் பனிக் காலங்களில் அதிகபட்சமாக 28 டிகிரியும், குறைந்தபட்சமாக 25 டிகிரியுமாக வெப்பநிலை நிலவும். அதோடு வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக அடூர் நகரில்  மிதமான மழைப் பொழிவும் இருக்கும். எனினும் இதமான வானிலை நிலவும் பனிக் காலங்களில் அடூர் நகரை சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அலாதியானது.