ஆக்ரா வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Agra, India 32 ℃ Sunny
காற்று: 17 from the WNW ஈரப்பதம்: 56% அழுத்தம்: 1008 mb மேகமூட்டம்: 0%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 25 Sep 28 ℃ 83 ℉ 38 ℃100 ℉
Tuesday 26 Sep 29 ℃ 83 ℉ 38 ℃101 ℉
Wednesday 27 Sep 31 ℃ 88 ℉ 38 ℃100 ℉
Thursday 28 Sep 32 ℃ 89 ℉ 38 ℃100 ℉
Friday 29 Sep 32 ℃ 89 ℉ 40 ℃103 ℉

அக்டோபர் முதல் மார்ச் வரை உள்ள பருவம் ஆக்ராவிற்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் பருவநிலை இனிமையானதாகவும் மிதமானதாகவும் காட்சியளிக்கிறது. மேலும் பல்வேறு திருவிழாக்களும் இக்காலத்தில்தான் நடத்தப்படுகின்றன. 45 டிகிரி வெயில் கொளுத்தும் கோடைக்காலத்தில் சென்றாலும் தாஜ் மஹாலை தரிசிக்கும் பரவச அனுபவமானது அந்த அசௌகரியங்களை எல்லாம் மறக்கச்செய்துவிடுகிறது என்பதும் ஒரு உண்மை.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : ஆக்ரா நகரத்தில் ஏப்ரல் மாதம் துவங்கும் கோடைக்காலம் மே மாதம்வரையில் நீடிக்கின்றது. இந்த மாதங்களில் அதிகபட்சமாக 45°C  வரை வெப்பநிலை செல்லக்கூடும். பலமான உஷ்ணக்காற்றும் இக்காலத்தில் வீசும் என்பதால் பெரும்பாலும் கோடைக்காலம் சுற்றுலாப்பயணிகளுக்கு மிகுந்த அசௌகரியத்தை தரும்.

மழைக்காலம்

(ஜுன் முதல் ஆகஸ்ட் வரை) : ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை ஆக்ரா நகரத்தில்  மழைக்காலம் நீடிக்கிறது. மழைப்பொழிவு வெப்பத்தை ஓரளவு தணித்தாலும் சுற்றுப்புறச்சூழலில் ஈரப்பதம் அதிகமாக காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

குளிர்காலம்

(அக்டோபர் முதல் ஜனவரி வரை) : அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை ஆக்ரா நகரத்தில் குளிர்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் ஆக்ரா நகரம் பகலில் இனிமையான சூழலுடனும் இரவில் கடுமையான குளிருடனும் காணப்படும். 12°C முதல்     அதிகபட்சமாக 25°C  வரை இக்காலத்தில் வெப்பநிலை நிலவுகிறது.