Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஹமதாபாத் » வானிலை

அஹமதாபாத் வானிலை

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : கோடைக்காலத்தில் அஹமதாபாத் நகரம் கடும் வறட்சியுடன் காணப்படுகிறது. மார்ச் முதல் ஜுன் வரை இங்கு கோடைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் சராசரி குறைந்த வெப்பநிலை 27°C ஆகவும் அதிகபட்ச வெப்பநிலை 41°C ஆகவும் இருக்கக்கூடும். தற்போது சுற்றுப்புறச்சூழல் மாசடைந்து காணப்படுவதால் கோடையில் சுற்றுலாப்பயணிகள் அசௌகரியத்தை அளிக்கும் அதிக உஷ்ணத்தை பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

மழைக்காலம்

(ஜுன் முதல் செப்டம்பர் வரை) : மழைக்காலத்தில் அஹமதாபாத் நகர்ப்பகுதி ஈரப்பதம் நிரம்பிய சூழலுடன் காணப்படுகிறது. தென்மேற்கு மழைப்பருவ காற்றுகள் இப்பகுதிக்கு கடுமையான மழைப்பொழிவை அளிக்கின்றன. ஆண்டுதோறும் சராசரியாக 800 மி.மீ மழையை அஹமதாபாத் பெறுகிறது. ஜுன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இங்கு மழைக்காலம் நீடிக்கிறது.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : நவம்பர் முதல் பிப்ரவரி வரை அஹமதாபாத் நகரம் குளிர்காலத்தை பெறுகிறது. வடதிசையிலிருந்து வீசும் குளிர்காற்றுகள் வீசுவதால் இக்காலத்தில் அஹமதாபாத் பகுதி அதிக குளிருடன் காணப்படுகிறது. குறிப்பாக ஜனவரி மாதத்தில் குளிர் மிக அதிகமாக இருக்கும். இதமான குளுமையான சூழல் நிலவுவதால் அஹமதாபாத் நகரத்திற்கு சுற்றுலா மேற்கொள்ள இந்த குளிர்காலமே ஏற்றதாக உள்ளது.