Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஜந்தா » வானிலை

அஜந்தா வானிலை

அஜந்தா குகைக்கோயில்களின் அழகானது பருவ காலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று. ஆகவே வெயில், மழை, குளிர் போன்ற எக்காலத்திலும் இவற்றின் அற்புத கலையம்சங்களை கண்டு ரசிக்கலாம்.  இந்தியாவின் வரலாற்றுப் பாரம்பரியத்தை தரிசிக்கும் தாகம்  கொண்ட பயணியின் ஆர்வத்தை இவை குறைக்கப்போவதில்லை.  இருந்தாலும் குளிர்காலம் மற்றும் மழைக்காலம் இந்த பகுதியை சுற்றிப்பார்ப்பதற்கு ஏற்றது.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் அஜந்தா சுற்றுலாஸ்தலம் சுட்டுப்பொசுக்கும்  வெப்ப நிலையைக் கொண்டதாக உள்ளது. பயணிகளுக்கு இது மிகுந்த அசௌகரியத்தை தரக்கூடிய வகையில் உள்ளது. குறிப்பாக வெளி நாட்டுப்பயணிகள் இந்த வெப்பத்தில் சோர்வடையக்கூடும்.

மழைக்காலம்

ஜுலை மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் அஜந்தா சுற்றுலாஸ்தலத்தில் மழைக்காலம் நிலவுகிறது.  இக்காலத்தில் இப்பகுதியின் தோற்றமே மாறி பசுமையுடனும் குளுமையுடனும் வரலாற்றுச்சின்னங்களின் பொலிவு துலங்கும்படி காட்சியளிக்கின்றது. குகைகளுக்கு அருகிலுள்ள ஆறும் இக்காலத்தில் நிரம்பி ஓடுவதால் இயற்கை எழில் இன்னும் கவர்ச்சியை பெறுகிறது.

குளிர்காலம்

அக்டோபர் முதல் மார்ச் வரை நிலவும் குளிர்காலத்தில் அஜந்தா சுற்றுலாஸ்தலத்தின் வெப்பநிலை குறைந்து குளுமையுடனும் இனிமையுடனும் காணப்படுகிறது. இக்காலத்தில் இந்த பாரம்பரிய ஸ்தலத்தை நன்கு சுற்றிப்பார்ப்பது எளிதாக உள்ளது.