சும்-செக் கோவில் அல்ச்சி மடத்தின் ஒரு பகுதியாகும். இதுவும் அதன் கட்டடக் கலைக்காக புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். சும்-செக் என்றால் மூன்று அடுக்கு கட்டிடம் என்று அர்த்தம்.
இந்த கட்டிடம் திபெடனின் முறைப்படி, அந்த கட்டிடக்கலையை தழுவி கட்டப்பட்டதாகும். இது இயற்கை கற்களால் மற்றும் களிமண்ணால் கட்டப்பட்டதாகும். இந்த சிறிய கோவிலில் நான்கு கைகள் கொண்ட போதிசட்வாசின் பெரிய சிலைகள் மூன்று உள்ளன.
இந்த சிலைகளை ஞானம் பெற்றவர்கள் என்றும் குறிப்பிடுவர். ஒவ்வொரு சிலையும் 4 மீட்டர் உயரத்தில் இருக்கும். மைத்ரேயா என்ற சிலை இந்த கோவிலின் நடுவில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை சிரிக்கும் புத்தா அல்லது ப்யுச்சர் புத்தா என்றும் அழைப்பர். இதற்கு இடது புறம் வெண்ணிற அவளோகிடேஷ்வரா என்ற போதிசட்வாவின் சிலை காணப்படுகிறது.
இந்த சிலை இரக்க குணம் உள்ள அனைத்து புத்தர்களையும் உள்ளடக்கியுள்ளது. சிரிக்கும் புத்தாவின் வலது புறம் மஞ்சுஸ்ரீ என்ற போதிசட்வாவின் சிலை உள்ளது. இது முதன்மையான அறிவை குறிக்கும்.



Click it and Unblock the Notifications