Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அலகாபாத் » ஈர்க்கும் இடங்கள் » சங்கம்

சங்கம், அலகாபாத்

41

சங்கம் எனும் சம்ஸ்கிருத வார்த்தைக்கு ‘கூடுமிடம்’ என்பது பொருளாகும். இந்த ஸ்தலத்தில் இந்தியாவின் மூன்று முக்கிய புனித ஆறுகளான கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகியவை ஒன்றோடொன்று சங்கமிக்கின்றன.

எனவே இதற்கு திரிவேணி சங்கமம் என்ற பெயரும் உண்டு. இந்த சங்கம ஸ்தலத்தில் சரஸ்வதி ஆறு பூமிக்கும் நுழைந்துவிடுவதாகவும் ஒரு ஐதீக கருத்து நிலவுகிறது. ஹிந்துக்கள் இந்த ஸ்தலத்தை ஒரு புனித பூமியாக கருதுகின்றனர்.

இந்த சங்கம தீர்த்தத்தில் ஒரு முறை மூழ்கி எழுந்தால் பாவங்கள் யாவும் நீங்கி மறுபிறவி தொலைத்து முக்தியை எட்டலாம் என்பது ஹிந்து ஐதீக நம்பிக்கை. இங்குதான் 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பமேளா திருநாள் கொண்டாடப்படுகிறது.

6 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் அர்த் மேளா திருவிழாவும் இங்குதான் நடத்தப்படுகிறது. இவை தவிர வருடாந்திரமாக ஜனவரி மாதத்தில் மக் மேளா எனும் திருவிழா இந்த இடத்தில் நடத்தப்பட்டுவருகிறது.

பக்தர்கள் குளிரைப்பொருட்படுத்தாமல் இந்த திருவிழாவின்போது புனித நீராடலில் ஈடுபடுகின்றனர். மேலும் இங்கு பல்வேறு முக்கிய தலைவர்களின் அஸ்தி கரைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 1948ம் ஆண்டில் மஹாத்மா காந்தியின் அஸ்தி இங்குதான் கரைக்கப்பட்டது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed