Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆலப்புழா » வானிலை

ஆலப்புழா வானிலை

மாலையில் குளுமையான கடற்காற்று வீசும் கோடைக்காலமானது தாங்கிக்கொள்ள முடிந்ததாக உள்ள போதிலும், குளிர்காலத்தை உள்ளடக்கிய ‘செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலான பருவமே’ ஆலெப்பி’ நகருக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது. இப்பருவத்தில் குளுமையான மற்றும் இனிமை நிறைந்த சூழல் நிலவுவதால் விடுமுறைச் சுற்றுலாவுக்கு இது மிகவும் ஏற்றதாக உள்ளது. தகிக்கும் உஷ்ணம், மற்றும் மழைக்கால சேறு, சகதி போன்ற எந்த சிரமங்களும் இல்லாமல் நீங்கள் இயற்கையின் எழிலை ரசித்து மகிழலாம்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூலை வரை): ‘ஆலெப்பி’ பிரதேசத்தில் கோடைக்காலம் வறட்சியுடன் காட்சியளிக்கிறது. கடலுக்கு மிக அருகில் இருப்பதால் ஈரப்பதமும் அதிகமாக உள்ளது. இக்காலத்தில் அதிகபட்சமாக 35° C க்கு மேலும் வெப்பநிலை உயரக்கூடும். மாலை நேரத்தில் கடற்காற்று வீச ஆரம்பிப்பதால் வெப்பநிலை சற்றே குறைந்தும் காணப்படும்.

மழைக்காலம்

(ஜுன் முதல் செப்டம்பர் வரை): ஜுலை மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் மழைக்காலத்தில் கேரளாவின் இடைவிடாத மழைப்பொழிவு காணப்படும். மிதமான தூறல் முதல் கடுமையான பொழிவு வரை இக்காலத்தில் நிலவுகிறது. இக்காலத்தில் சுற்றுலாப்பயணம், தங்கல் எல்லாமே அசௌகரியத்தை தரும் வகையில் இருக்கும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): கேரளாவில் நவம்பர் மாதத்தில் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிக்கும் குளிர் காலத்தில் இதமான குளுமையான சூழல் நிலவுகிறது. குறைந்தபட்சம் 18° C முதல் அதிகபட்சமாக 30° C வரை இக்காலத்தில் வெப்பநிலை நிலவுகிறது. சாகசச்சுற்றுலா, ஹனிமூன் பயணம், ஆன்மீக யாத்திரை அல்லது உப்பங்கழி நீர்த்தேக்க பொழுதுபோக்குகள் போன்ற எல்லா அம்சங்களுக்கும் இந்த குளிர்காலமே ஏற்றதாக உள்ளது.