Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அம்ரித்ஸர் » வானிலை

அம்ரித்ஸர் வானிலை

மழைக்காலம் கடந்த பின் செப்டம்பர் மாதத்தின் துவக்கத்திலிருந்து அம்ரித்ஸர் நகரில் குளுமையான சூழல் நிலவ ஆரம்பிக்கிறது. அதன் தொடர்ச்சியாக வரும் குளிர்காலமும் வெளிச்சுற்றுலாவுக்கேற்ற இனிமையான சூழலை அளிக்கிறது. எனவே அக்டோபர் தொடங்கி மார்ச் வரையான பருவம் இதமான குளுமையுடன் சுற்றுலாவுக்கு ஏற்றதாக உள்ளது.

கோடைகாலம்

ஏப்ரல் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் ஜுன் வரை நீடிக்கிறது. அம்ரித்ஸர் நகரம் கோடைக்காலத்தில் 45°C  வரை வெப்பநிலையை பெறுகிறது. கடும் உஷ்ணம் நிலவுவதால் கோடைக்காலத்தில் பயணிகள் அம்ரித்ஸர் நகருக்கு சுற்றுலா மேற்கொள்வதை தவிர்க்கின்றனர்.

மழைக்காலம்

ஜுலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இங்கு மழைக்காலம் நீடிக்கிறது. வருடந்தோறும் 541.9 மி.மீ மழையை பெறும் அம்ரித்ஸர் நகரம் மிதமானது முதல் கடுமையானது வரையான மழைப்பொழிவை பெறுகிறது. மழைக்காலத்தை அடுத்து செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான பருவத்தில் குளுமையான சூழல் நிலவுகிறது.  

குளிர்காலம்

நவம்பர் மாதத்தில் துவங்கி மார்ச் இறுதி வரை இங்கு குளிர் அதிகமாக காணப்படுகிறது.  இக்காலத்தில் 4°C  தொடங்கி  18°C  வரை வெப்பநிலை நிலவுகிறது.  சிலசமயங்களில் 0°C  க்கும் கீழே வெப்பநிலை குறையக்கூடும். மேற்குப்பருவக்காற்றுகளின் பாதிப்பு காரணமாக மழை மற்றும் புயல் போன்றவையும் இக்காலத்தில் ஏற்படுகின்றன.