நக்பல் என்ற புகழ் பெற்ற ஹிந்து புனித ஸ்தலம் அனந்த்நாகில் அமைந்துள்ளது. இந்த தலத்தில் ஒரு புனித ஓடை, மலை இடுக்குலிருந்து சுரப்பதை காணலாம். இந்த ஓடை விஷ்ணு கடவுளை வணங்கும் தலமாக பார்க்கப்படுகிறது.
இதனை அனந்தா என்றும் அழைப்பர். இந்த வளாகத்தில் ஒரு பெரிய குளமும் அமைந்துள்ளது. இதனுள் வாழும் மீன்களை பக்தர்கள் மிகவும் புனிதம் வாய்ந்ததாக கருதுகின்றனர்.
சிதைந்த நிலையில் ஒரு சிறிய கோவிலை புனித ஓடையின் இடது புறமாக காணலாம். இந்த கோவில் காஷ்மீரை ஆண்ட இரண்டாம் டோக்ரா அரசர், மகாராஜ ரன்பீர் சிங்கால் கட்டப்பட்டது. இக்கோவில் சிதைந்த நிலையில் இருந்தாலும் பக்தர்கள் ஆனந்த பகவானின் சிலையை தரிசிக்க முடியும்.
இந்த வளாகத்தில் உள்ள மற்றொரு கோவிலின் பெயர் ஷிவ் ஜி கோவில். இது இந்த வளாகத்தில் உள்ள பழமையான கோவிலாகும். இக்கோவில் மகாராஜ பிரதாப் சிங் அரசரின் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1885-1925-ல் கட்டப்பட்டது.
ஹிந்து கோவில்களை தவிர இந்த வளாகத்தில் சீக்கியர்கள் வழிபாடும் குருத்வாரா என்ற கோவிலும், மருத்துவ குணங்கள் உள்ள சல்பர் ஓடை ஒன்றும் உள்ளது. இந்த சல்பர் ஓடை சரும நோய்களை குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications