Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அரிடார் » வானிலை

அரிடார் வானிலை

அரிடாரில் பொதுவாக இனிமையான சூழ்நிலையே ஆண்டு முழுவதும் நிலவுகிறது. அரிடாரின் வானிலை லேசான கோடை மற்றும் நீண்ட மழைக்காலத்தை உள்ளடக்கியது.

கோடைகாலம்

கோடை காலம்  மார்ச்சில் தொடங்கி  மே வரை நீடிக்கிறது. இந்த காலத்தில் இங்கு பொதுவாக குளிர் மற்றும் வசதியான வெப்பநிலையே நிலவுகிறது.

மழைக்காலம்

இங்கு பருவமழை ஏப்ரல் மாதத்தில் தொடங்கி நவம்பர் மாதம் வரை நீடிக்கிறது.  இந்த பருவத்தில் வீட்டை விட்டு வெளியேறுவது இயலாத காரியமாகும். எனவே இந்த பருவத்தில் அரிடார் செல்வது உகந்தது அல்ல.

குளிர்காலம்

இங்கே குளிர்காலம், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கிறது. இக்காலங்களில் வெப்பநிலை உறைபனி அளவிற்கு செல்லக்கூடும். ஒரு சில வருடங்களில் இந்த பருவத்தில் இங்கு பனிப்பொழிவும் ஏற்படும்.