கடல் மட்டத்திலிருந்து 1200 மீ உயரத்தில் உள்ள இந்த திவான் இ காஸ் அல்லது மக்கள் சந்திப்பு முற்றம் என்று அழைக்கப்படும் மாளிகை சோலன் மாவட்டத்தில் உள்ள அர்கீயில் உள்ள பிரசித்தமான சுற்றுலாத்தலமாக புகழ்பெற்றுள்ளது.
கலைகளில் ஆர்வம் மிக்கவராக இருந்த ராம் ஷரா சிங் எனும் அர்கீ ராஜ்ஜிய மன்னரால் 1830ம் ஆண்டில் இந்த மாளிகை கட்டப்பட்டிருக்கிறது. இதில் காங்க்ரா, ராஜஸ்தானி, அர்கீ, குல்லு மற்றும் ஐரோப்பிய பாணிகளில் வரையப்பட்ட சுவரோவியங்கள் காணப்படுகின்றன.இங்கு காணப்படும் மலர் அலங்கார சித்தரிப்புகள் மற்றும் பெண்ணுருவ சிலைகள் போன்றவை குலேர் வம்சத்தின் கலையம்சங்களை பிரதிபலிப்பவையாக உள்ளன.
சீன ஓவியங்கள், பஞ்சாபி நாட்டுப்புற கலையம்சங்கள், சிருங்காரக்காட்சிகள், போர்க்களக்காட்சிகள், மிருகங்கள், பறவைகள் மற்றும் புராணக்கதைகளின் காட்சிகள் ஆகியவை இந்த திவான் இ காஸ் மாளிகையில் சுவரோவியங்களாக தீட்டப்பட்டிருக்கின்றன. அர்கீ பிரதேசத்தின் செழுமையான கலைப்பாரம்பரியத்திற்கான சான்றுகளாக இந்த சுவரோவியங்கள் ஜொலிக்கின்றன.



Click it and Unblock the Notifications