அர்கீயிலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள இந்த லுட்டுரு மஹாதேவ் கோயில் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலுள்ள சோலன் மாவட்டத்தில் பிரசித்தமான சுற்றுலாத்தலமாக அறியப்படுகிறது.
சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோயில் 1621ம் ஆண்டில் பாகல் ராஜ்ஜியத்தின் மன்னரால் கட்டப்பட்டிருக்கிறது. புராணக்கதைகளின்படி, சிவபெருமான் மன்னரின் கனவில் தோன்றி தனக்கு ஒரு கோயிலை கட்டும்படி கேட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
சிவரத்திரி பண்டிகைக்கான பிரதான ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் சிவனின் அடையாளமான சிவலிங்கம் அமைந்துள்ளது. ஒரு மலையின் உச்சியின் வீற்றுள்ள இக்கோயில் ஷிகரா பாணி கட்டிடக்கலைக்கு ஏடுத்துக்காட்டாக காட்சியளிக்கிறது. அதிக உயரத்தில் அமைந்திருப்பதால் சுற்றிலும் உள்ள அற்புதமான இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிக்கும் வாய்ப்பை இந்த கோயில் தலம் யாத்ரீகர்களுக்கு வழங்குகிறது.



Click it and Unblock the Notifications